இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு பதில் விளையாடப் போகும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் யார் ? நடராஜனுக்கு இடம் கிடைக்குமா ?

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு பதில் விளையாடப் போகும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் யார் ? நடராஜனுக்கு இடம் கிடைக்குமா ?

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி அருகே சென்று விட்ட இந்திய அணி திடீரென்று நடைபெற்ற கலவரத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்தது.

இந்த தொடரின் இரண்டாவது போட்டி மெல்பன் மைதானத்தில் வரும் 26ஆம் தேதி துவங்க இருக்கிறது. குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்கு திரும்பி விடுவார். சொந்த வேலை காரணமாக இந்தியாவிற்கு விரும்புவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயமடைந்தார். இந்த போட்டியில் 2-வது ஆட்டத்தில் இவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து அவரது கையில் பட்டு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காரணத்தால் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

முகமது சமி அவருக்கு பதிலாக நவதீப் சைனி அல்லது முகமது சிராஜ் இருவரில் யாராவது ஒருவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முகமது சிராஜ் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடப்பட்ட பயிற்சி போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இவர் களமிறங்கினால் அறிமுக வீரராக களம் இறங்குவாரா ? இதை தாண்டி இந்திய அணி நிர்வாகம் இவருக்குப் பதிலாக மாற்று பந்து வீச்சாளரை அல்லது இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய விரும்பினால், ஆஸ்திரேலியாவில் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் மட்டுமே இருக்கிறார்.

இவர்களைத் தாண்டி ஷர்துள் தகூர் மற்றும் கார்த்திக் ஆகிய வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் நடராஜனுக்கு இடம் கிடைக்கிறதா என்று.

Prabhu Soundar:

This website uses cookies.