இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் அதிரடி, அவரது பளார் என்ற ஷாட் அனைவரும் அறிந்ததே. கடந்த சில வருடங்களாகவே அவரின் அதிரடியை காணாத ரசிகர்கள் பெரிது ஏமாற்றத்தில் இருந்த பொது, இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி ஆடியதையும் கோப்பையை பெற்று தந்ததும் யாராலும் மறக்க இயலாத தருணம் அது.
அதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 க்கும் மேல்.சாதாரணமாக இவர் 6வது இடத்தில இறங்குவது வழக்கம். இம்முறை 4வது மற்றும் 5வது இடத்தில இறங்கி கலக்கினார். ஆனால் தற்போது இந்திய அணியில் ஆடுகையில், அவரின் ஆட்டம் மீண்டும் மந்தமான நிலையை வெளிப்படுத்துகிறது.
அவர் அவரை போலவே ஆடவில்லை. முன்பு இருந்த தோனிக்கும் தற்போது இருக்கும் தொனிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவர் அவரின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்படுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 59 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்தார். எடுக்கவேண்டிய ரன்கள் ஓவருக்கு 10 ரன்களை தாண்டிக்கொண்டு இருந்தது. அப்பொழுதும் தோனி சில டாட் பந்துகளை வைத்துக்கொண்டு இருந்தார். மறுமுனையில் அவருக்கு எந்தவித உறுதுணையும் இல்லை.
தோனி துவக்கத்தில் சிறு நேரம் எடுத்து களத்தில் நிலைத்து பின் அடிக்க முயற்சிப்பார். மேலும், ஸ்பின்னர்களுக்கு எதிரான தடுமாற்றம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
இதே மாதிரியான ரன்களை கடைசி வரை நின்று அடித்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை குவித்து தந்துள்ள தோனி, இந்த போட்டியில் அதுபோல் சோபிக்கவில்லை. அதற்க்காக தோனியை மட்டும் குறை கூறுவது சரியானதல்ல.
இந்திய அணிக்கு தற்போது வரை கீழ் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெருமளவு நிலைத்து நின்று ஆடி தரும் அளவிற்கு சரிவர அமையவில்லை.
தோனியை குறை கூறுவது சரியா?
இந்திய அணி தோலிவி அடைவது பற்றிய கவலையில்லை இது, ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடைபெற்றதை போல் போராடாமல் தோற்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு அணி இதுபோன்று எளிதில் சரணடைந்தால் சற்றும் ஆரோக்கியமானதாக இராது. ஆனால் இதற்க்கு தோனி என்ற தனி நபரை மற்றும் குறை கூற இயலாது. சரியாகவும் அமையாது.
ஒருநாள் போட்டியில், ஆறாவதாக இறங்கி 10000 ரன்களை கடப்பது எளிதான காரியம் அல்ல. அதிழும் 273 இன்னிங்சில் கடப்பது என்றால் சாதாரண வீரராக கருதிட முடியாது.
காரணம், இந்திய வீரர்களில் இந்த மைல்கல்லை எட்டிய 4வது வீரர் தோனி. உலக அளவில் 12வது என்ற பெருமையும் இவருக்கே. இவர் ஆடிய 273 இன்னிங்சில் 78 முறை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார்.
இவரது ரன்களில் 75 சதவீதத்திற்கும் மேல் இவர் ஆறாவது வீரராக களமிறங்கி ஆடியதில் வந்தது.
இப்படி ஆடிய ஒரு வீரரை, ஒன்று இரண்டு போட்டிகளுக்காக எளிதில் குறைகூறிட இயலாது.