மார்க் வுட் ஏன் பிளேயிங் லெவனில் இல்லை? ஸ்பின் பிட்ச்ன்னு வெளிய உக்கார வைக்கல… அவருக்கு திடீர்ன்னு நடக்கக்கூடாதது நடந்துருச்சு – கேஎல் ராகுல் கொடுத்த ஷாக்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஏன் மார்க் வுட் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை? இதில் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல்.

லக்னோவில் நடைபெற்ற இந்த சீசனின் பத்தாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. லோ ஸ்கோரிங் த்ரில்லராக இருந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததால் எவரும் சரிவர பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது. லக்னோ அணியின் ஸ்பின்னர் சிறப்பாக பவுலிங் செய்து ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர். பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தது.

அதன் பின்னர் 122 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தது.

வெற்றி பெற்ற பிறகு விருது வழங்கும் நிகழ்வில் பேட்டியளித்த கேப்டன் கேஎல் ராகுல், வெற்றிக்கான காரணம் குறித்து பேசினார். அதன் பிறகு இவரிடம் முதல் இரண்டு போட்டிகளில் லக்னோ அணிக்காக அசத்திய மார்க் வுட் ஏன் மூன்றாவது லீக் போட்டியில் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இதில் ஏதாவது ஸ்பெஷல் திட்டம் இருக்கிறதா? என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய கேஎல் ராகுல்,

“மார்க் சிறந்த பார்மில் இருக்கிறார். அவரை வெளியில் அமர்த்தும் திட்டம் எங்களுக்கு இல்லை. துரதிஷ்டவசமாக இந்த க்ளைமேட் கண்டிஷன் அவருக்கு ஒற்றுப்போகவில்லை. லக்னோ டூ சென்னை மீண்டும் சென்னை டூ லக்னோ என அடிக்கடி கண்டிஷன் மாறிக்கொண்டே இருந்ததால் காய்ச்சல் வந்துவிட்டது.

காய்ச்சல் காரணமாக நேற்று பயிற்சியிலும் அவரால் ஈடுபட முடியவில்லை. இன்று மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். இதனால் தான் அவரை வெளியில் அமர்த்த நேர்ந்தது. விரைவாக இந்த கண்டிஷனுக்கு தகவமைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளுக்கு அவர் மிகவும் முக்கியம்.” என்றார் கேஎல் ராகுல்.

மார்க் வுட், டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கினார். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி மொத்தம் எட்டு விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.