தோனிக்கு ஏன் அதிக ஹேட்டர்ஸ்? கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கையும்.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

தோனி இந்திய அணியில் கேப்டன் பொறுப்பிலும் சக வீரராகவும் பல சாதனைகளையும் படைத்திருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ அதற்க்கு அளவாக எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபொழுது உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை என அனைத்தையும் வென்று தந்திருக்கிறார்.

இவை அனைத்தையும் வென்று தந்திருந்தாலும், அவருக்கு ஹேட்டர்ஸ் நிறைந்த உலகமாகவே இருக்கிறது. இவை அணிவதும் வெளியில் இருந்து வந்ததா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும் ஏனெனில், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து தான்.

அவர்கள் தோனியை எதிர்க்க இன்றளவும் நம்பும் 5 கட்டுக்கதைகள் மற்றும் மூட நம்பிக்கையை தான் நாம் காண இருக்கிறோம்.

  1. மூத்த வீரர்களான சேவாக், கம்பிர் மற்றும் சிலரின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிட்டார்.

முதலில் நான் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தோனி அணிக்காக ஒரு தனி தேர்வு குழுவில் இருப்பதோடு, அணியின் அனைத்து உறுப்பினர்களையும் அவர் மட்டுமே தேர்வு செய்யவில்லை. சில ஆலோசனைகளுக்கு மட்டுமே அவர்கள் தோனியிடம் ஆலோசனை கேட்டார்கள். எனவே, சேவாக், யுவராஜ், கம்பிர் ஆகியோரின் வாழ்க்கையை அவர் முடித்துவிட்டார் என்று சொல்வதும் மிகவும் கடினமாக இருக்கிறது.

சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் மோசமான மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், யுவி உடலில் சில ஃபிட்னஸ் பிரச்சினைகள் இருந்தன, அதன் காரணமாக அவர் அணியில் இருந்து வெளிறினார். அவர் அனைத்திவரும் இந்திய அணிக்காக சிறப்பாக அடியவர்கள் தான், ஆனால் அன்றைய நாளில் அவர்கள் உடல்தகுதி மற்றும் ஆட்டத்தின் வெளிப்பாடு மிகவும் முக்கியம் அதை அவர்கள் சரிவர செய்யவில்லை அதனால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடி அணிக்கு திரும்ப வந்திருக்கலாம் ஆனால் அவர்கள் மீண்டும் அணியில் மோசமான தோல்வியை சந்தித்தனர் மற்றும் ஐபிஎல் போட்டியில் மோசமான தோற்றத்தை கொண்டிருந்தனர்.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Vignesh G:

This website uses cookies.