வெஸ்ட் இண்டீஸ் பேயாட்டம்: நியுஸிலாந்தை வீழ்த்தி அபாரம்

நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 421 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது பயிற்சி ஆட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கெயில் தனது வழக்கமான டி20 பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்நது களமிறங்கிய ஹோப் அதிரடியாக ரன் குவிக்க அணியின் ரன் ரேட் 7-க்கு மேல் இருந்து வந்தது.

BRISTOL, ENGLAND – MAY 28: Andre Russell of West Indies batting during the ICC Cricket World Cup 2019 Warm Up match between West Indies and New Zealand at Bristol County Ground on May 28, 2019 in Bristol, England. (Photo by Andy Kearns/Getty Images)

இந்த நிலையில் அரைசதம் அடித்த லீவிஸ் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பிராவோ மற்றும் ஹெத்மயர் முறையே 25, 27 ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். எனினும், மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹோப் சதம் அடித்தார். அவரும் சதம் அடித்த கையோடு 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் ஹோல்டர் மற்றும் ரஸல் டி20 ஆட்டத்தைப் போல் அதிரடியாக விளையாட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் ரேட் உயர்ந்தது. ரஸல் தனது ஐபிஎல் ஃபார்மை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்தார்.

இதனிடையே ஜேஸன் ஹோல்டர் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே, 23-வது பந்தில் அரைசதம் அடித்த ரஸலும் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 370 ரன்களைக் கடந்து 8 விக்கெட்டுகளை இழந்த போதிலும், பிராத்வைட் மற்றும் நர்ஸ் கடைசி கட்டத்தில் மிரட்டினர். இதனால், அந்த அணி 400 ரன்களை கடந்தது.

இதையடுத்து, பிராத்வைட் 16 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, ரோச் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

BRISTOL, ENGLAND – MAY 28: Kane Williamson of New Zealand batting during the ICC Cricket World Cup 2019 Warm Up match between West Indies and New Zealand at Bristol County Ground on May 28, 2019 in Bristol, England. (Photo by Andy Kearns/Getty Images)

இதன்மூலம், அந்த அணி 49.2 ஓவர்களில் 421 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நர்ஸ் 9 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.422 ரன்கள் இலக்குடன் நியூஸி தரப்பில் கப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். 47.2 ஓவர்களில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸிலாந்து. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மே.இ.தீவுகள். நியூஸி தரப்பில் டாம் பிளன்டல் 106, கேன் வில்லியம்ஸன் 85 ரன்களை விளாசினர். மே.இ. தரப்பில் கார்லோஸ் பிராத்வொயிட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Sathish Kumar:

This website uses cookies.