வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கே எல் ராகுலுக்கு பதில் விளையாட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
2022 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் ஓய்வில் இருக்கும் கேஎல் ராகுல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது,ஆனால் ராகுலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரிலும் இவர் ஓய்வில் இருக்கிறார்.
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்குபெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிசிசிஐ இவரை ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
இதனால் இவருக்கு பதில் மற்றொரு வீரரை களமிறக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு பதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்..
ருத்ராஜ் கெய்க்வாட் ..
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருத்ராஜிர்க்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கவில்லை.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கே எல் ராகுலுக்கு பதில் களமிறங்குவதற்கான வாய்ப்புள்ள முதன்மை வீரராக ருத்ராஜ் கெய்க்வாட் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.