துவக்க வீரராக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்… முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

விண்டீஸ் அணியுடன் முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி 29ம் தேதி துவங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுடன், ரிஷப் பண்ட் களமிறங்குவார் என தெரிகிறது. கே.எல் ராகுல் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது.

மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெறுவார்கள். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெறுவார்கள்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியிலேயே அர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.

முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஆவேஸ் கான்.

Mohamed:

This website uses cookies.