இந்தியா விண்டீஸ் இடையேயான நான்காவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும், விண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது போட்டி 6ம் தேதி நடைபெற உள்ளது.
முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற நிலையில், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெற உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் அமெரிக்காவின் ப்ளோரிடா சென்றுள்ளனர்.
நான்காவது டி.20 போட்டியான இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுவதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த போட்டியின் காயமடைந்த ரோஹித் சர்மா, காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. எனவே கடந்த போட்டிகளை போல் இந்த போட்டியிலும் ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவுமே துவக்க வீரர்களாக களமிறங்குவர்.
மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெறுவார்கள். ஆல் ரவுண்டர்களாக தீபக் ஹூடாவும், ரவிச்சந்திர அஸ்வினும் இடம்பெறுவார்கள். ஜடேஜாவிற்கு இந்த போட்டியிலும் ஓய்வு வழங்கப்படும் என தெரிகிறது.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆவேஸ் கானிற்கு இடம் கிடைக்காது என தெரிகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத ஹர்சல் பட்டேல் இந்த போட்டியில் மீண்டும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரும் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இடம்பெறுவார்கள்.
நான்காவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திர அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், அர்ஸ்தீப் சிங்.