கிரிக்கெட் போட்டியில் எப்போதும் களத்தில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறுவது வழக்கம். அப்படி ஒரு நிகழ்வுதான். டுர்ஹாம் மற்றும் யார்க்ஷைர் இடையேயான டி20 ப்ளாஸ்ட் தொடரில் அரங்கேறியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் டி20 ப்ளாஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் யார்க்ஷைர் கீப்பர் ஜோனாதன் டாட்டசெல் தனது அணியின் சக வீரர் கேசவ் மஹாராஜை பந்தை கொண்டு எரிந்து தாக்கினார். எதிர்முனையில் ரன் அவுட் அடிக்க முயல்கையில் அது மஹாராஜ் மேல் விழுந்தது. அவரது தொடையை பலமாகி தாக்கி வலியால் துடித்தார்.
டாட்டர்செல் டுர்ஹாம் வீரரின் ஒற்றை ரன்னை தடுக்க வேகமாக த்ரோ செய்ய அது தவறுதலாக மஹாராஜை தாக்கியது. இதனை அந்த ட்விட்டர் பக்கம் மோசமான பந்து என்று பதிவிட்டுள்ளது.
காயமடைந்த மஹாராஜ் 4 ஓவர்களை வீசி ஒரு விஒக்கெட் கூட வீழ்த்தவில்லை. டுர்ஹாமுக்கு 147 ரன்களை என்ற இலக்கை யார்க்ஷைர் நிர்ணயித்தது. ஆனால் 132 ரன்களுக்கு டுர்ஹாம் ஆலவுட் ஆனதால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
யார்க்ஷை கேப்டன் காட்மோர் 52 ரன்கள் குவித்து அசத்தினார். லீனிங் 39 ரன்கள் குவித்தார். அதிர்த்து ஆடிய டுர்ஹாம் அணியில் ஸ்டிஒ 49 ரன்களையும், ஷார்ட் 29 ரன்களையும் குவித்தனர்.
ஆனால் யார்க்ஷைரின் ஜாக் ஷட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 5/11 என்ற பந்துவீச்சை பதிவு செய்த அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரன் அவுட் வாய்ப்பு தவறவிட்ட போதிலும், யார்க்ஷயர் டர்ஹாம் அணியை எதிர்த்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யார்க்ஷயருக்காக ஜாக் ஷட் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த அணி 106/2 ஐ எட்டியது, ஆனால் பின்னர் 32 பந்துகளில் எட்டு விக்கெட்டுகளை இழந்தது, வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. டர்ஹாம் 19 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்து போட்டியில் தோற்றது.