2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகள் இழந்த அணிகளின் பட்டியல்!
இந்த வருட ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடிவினை எட்டிவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் லீக் சுற்று ரோடு நடையை கட்டிவிட்டனர்
மும்பை இந்தியன்ஸ் அணி லீக் தொடரின் முடிவில் முதலிடத்திலும் டெல்லி அணி இரண்டாம் இடத்திலும் ஹைதராபாத் அணி மூன்றாம் இடத்திலும் பெங்களூர் அணி நான்காம் இடத்திலும் இருந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கட்டமைக்கப்பட்டு டெல்லி அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு வருடாவருடம் நுழைய ஆரம்பித்துவிட்டது
பெங்களூரு அணி கடைசி நான்கு போட்டிகளில் தோற்றும், ஹைதராபாத் அணி கடைசி மூன்று போட்டிகள் தோற்றும் பிளே ஆப் சுற்றுக்கு வந்துவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற குவாலிபயர் போட்டியில் டெல்லி அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்த அதிகமுறை விக்கெட்டுகளை இழந்த அணியாக டெல்லி அணி மாறி இருக்கிறது. மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி 9 முறை தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து மோசமான சாதனை படைத்திருக்கிறது.
முதல் ஓவரிலேயே அதிகமுறை விக்கெட்டுகளை இழந்த அணிகளின் பட்டியல்
டெல்லி – 9 முறை
மும்பை இந்தியன்ஸ் – 3 முறை
சென்னை சூப்பர் கிங்ஸ் – 3 முறை
ராஜஸ்தான் ராயல்ஸ் – 2 முறை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- 2 முறை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 2 முறை
ராயல் சேலஞ்சர்ஸ் – 1 முறை
பெங்களூர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 1 முறை