ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் அடித்ததற்கு இவரின் திமிர் பேச்சு தான் காரணம்; உண்மையை உடைத்த யுவராஜ் சிங் !!

ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் அடித்ததற்கு இவரின் திமிர் பேச்சு தான் காரணம்; உண்மையை உடைத்த யுவராஜ் சிங்

கடந்த 2007 இல் செப்டம்பர் 19 ஆம் தேதி நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங், ஆறு பந்தில் ஆறு சிக்சர் அடித்து புது சாதனை படைத்தார். இவரின் கோவத்துக்கு பழியானது ஸ்டுவர்ட் பிராட்.

பவுலிங் செய்தது ஸ்டுவர்ட் பிராடாக இருந்தாலும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பிளிண்டாப். பிராட் பவுலின் செய்வதற்கு முன்பாக பிளிண்டாப் யுவராஜ் சிங் உடன் வம்பு இழுத்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,“உண்மையைச் சொல்லப்போனால், சிக்சர்கள் அடிக்கும் எண்ணமே இல்லை. ஆனால் பிளிண்டாப் உடனான வாக்குவாதம் என்னை சூடாக்கிவிட்டது.

பிளிண்டாப் பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்தேன். அது அவருக்கு பிடிக்கவில்லை. அதன் பின் அந்த ஓவரை தொடர்ந்து எதிர் முனைக்கு நான் சென்ற போது. அவர் என்னிடம் இது மட்டமான ஷாட்கள் என்றார். நான் அவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்டேன்.

அதன் பிறகு பெரிய வாக்குவாதம் நடந்தது. பிளிண்டாப் என்னிடம் என் சங்கை அறுத்திவிடுவேன் என்றார். அதற்கு நான் என் கையில் பேட் உள்ளது பார்த்தாயா. இந்த பேட்டை வைத்து நான் உன்னை எங்கு அடிப்பேன் என உனக்கே தெரியும்? என்றேன். அதன் பிறகு அம்பயர் குறுக்கிட்டார். ஆனால் எனக்கு அதன்பிறகு சூடு தலைக்கு ஏறியது. அப்போது தான் முடிவு செய்தேன் எல்லா பந்தையும் மைதானத்தைவிட்டு வெளியே பறக்கவிட வேண்டும் என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக அது அன்று நடந்துவிட்டது” என்றார்.

Mohamed:

This website uses cookies.