ஹர்திக் பாண்டியா கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் தற்பொழுது சுமார் இரண்டு ஆண்டிற்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அவர் சேர்க்கப்படவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு மொத்தமாக 17 ஓவர்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பந்து வீச அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல ஐபிஎல் தொடரிலும் ஒரு ஓவர் கூட அவருக்கு கொடுக்கப்படவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தவிர்க்கப்பட்ட ஹர்டிக் பாண்டியா
மேலும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கான இடம் இந்திய அணியில் வழங்கப்படவில்லை. அதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்பட்டது அவர் தற்போது பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார், பௌலிங் வீசுவதில் சிறமப் படுகிறார்.
எனவே பேட்டிங் அடிப்படையில் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக அவரை இந்திய அணியில் விளையாட வைக்க முடியாது என்கிற விளக்கத்தையும் இந்திய கிரிக்கெட் குழு கூறியிருந்தது. மேலும் எப்பொழுது அவர் மீண்டும் பழையபடி பந்துவீச தயாராக உள்ளாரா அப்பொழுது அவருக்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் குழு உறுதி அளித்திருந்தது.
மீண்டும் பழைய உடற்தகுதியுடன் வருவேன் ; அப்படி வரும் பட்சத்தில் மீண்டும் பந்து வீசுவேன்
இது குறித்து பேசி உள்ள அவர், நான் தற்பொழுது எனது உடல் தகுதியை மேம்படுத்தி வருகிறேன். அறுவை சிகிச்சை நடந்து முடிந்த உடன் எனது உடல்நிலை சற்று மாறி இருக்கிறது. அதன் காரணமாக முன்பு போல என்னால் முழுநேர பௌலராக செயல்பட முடியவில்லை. எனவே தற்போது எனக்கு இருக்கும் ஒரே நோக்கம் மீண்டும் என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்துவது மட்டும் தான்.
மீண்டும் பழையபடி பூரண உடல் நலத்துடன் மீண்டு வந்து இந்திய அணிக்காக முழுநேர பந்துவீச்சாளராக செயல்படுவேன். அதுவரை தற்போது பேட்டிங் மட்டும் விளையாட போவதாகவும் கூறியுள்ளார். மேலும் 50 சதவீதம் என்னுடைய முழு திறமையை காண்பிக்க நான் விரும்பவில்லை நான் என்னுடைய திறமையை 100 சதவீதம் முழுமையாக காண்பிக்கவே விரும்புகிறேன் என்றும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.