ஐபில் 10வது தொடர் 22வது போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாபை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் 5வது வெற்றியை தொடர மும்பை இந்தியன்ஸும், தோல்வியை மறக்க கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை செய்கிறது.
மும்பை இந்தியன்ஸ் 5 போட்டிகளில் 4 வெற்றியும், பஞ்சாப் அணி கடைசி மூன்று போட்டிகளில் தோல்வி கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபில்-இல் சொல்லி கொள்ளும்படி நல்ல தொடக்கத்தை தரவில்லை.
இருந்தாலும் மிடில்-ஆர்டர் வீரர்கள் நிதிஷ் ராணா, ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் கிரண் பொல்லார்ட் ஆகியோர் பட்டயகிளப்பி வருகிறார்கள்.
குஜராத் லியன்ஸுடன் ரோகித் சர்மா 40 ரன் அடித்தார். இது அவர் பார்மிற்கு திரும்பி வந்தது சுட்டிக்காட்டுகிறது. இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்க் முதல் 6 ஓவரிலும், மலிங்கா மற்றும் பும்ரா கடைசி நேரத்திலும் பட்டயகிளப்பி வருகிறார்கள். விக்கெட் எடுக்க முடியாத சூழ்நிலையில் மெக்கலனகன் விக்கெட் எடுத்து அசதி வருகிறார்.
பஞ்சாப் அணியோ விளையாடிய 5 போட்டிகளில், முதல் 2 போட்டிகளில் வெற்றியை கண்டாலும் அடுத்த 3 போட்டிகளில் தோல்வியையே கண்டது.
பஞ்சாபில் கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், இயான் மோர்கன் ஆகிய அடித்து ஆடக்கூடியவர்களும், தக்க சமயத்தில் அடிக்க கூடிய ஹசிம் ஆம்லா, வ்ரிதிமான் சஹா ஆகியோரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் இந்த ஐபில்-இல் ஜொலிக்கவில்லை. அதுதான் பஞ்சாபின் தோல்விற்கு காரணம் ஆகும்.
பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா, மோகித் சர்மா, சந்தீப் சர்மா ஆகியோர் உள்ளனர். அவர்களும் இந்த ஐபில்-இல் ஜொலிக்காத காரணத்தினால், எதிரணியின் ரன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த போட்டி இரண்டு அணிக்குமே முக்கியம் என்பதால், இரண்டு அணியும் வெற்றி பெறவேண்டும் என்னும் முனைப்புடன் விளையாடும்.