இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தை மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தி வருகிறது. அந்த அணியில் பொல்லார்டு நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அந்த அனுபவம் பந்து வீச்சாளர்களுக்கு பலனை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘மும்பை வான்கடே மைதானத்தில் பொல்லார்டு அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு விளையாடவில்லை.
அந்த அனுபவத்தை மற்ற வீரர்கள் பெற்றுக்கொள்வது விலைமதிப்பற்றதாகும். குறிப்பாக கேப்டன் பொல்லார்டிம் இருந்து. அவர் வான்கடேயில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்’’ என்றார்.
கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தொடர்ச்சியாக 2 தொடரை (3-0, 3-0) கைப்பற்றி இருந்தது. தற்போது ‘ஹாட்ரிக்‘ தொடரை வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி எல்லா வகையிலும் கடும் சவாலாக இருக்கும்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையில் இருக்கும் இந்தியா பீல்டிங்கில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சரி செய்வது மிகவும் அவசியமானது.
அதிரடி வீரரான ரோகித் சர்மா கடந்த 2 ஆட்டத்திலும் சோபிக்க தவறிவிட்டார். ஒரு சிக்சர் கூட அவரால் அடிக்க முடியாமல் போனது பரிதாபமே. அவர் 23 ரன்களே எடுத்துள்ளார். சொந்த மண்ணில் நாளை விளையாடுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
புதுமுக வீரர் ஷிவம் டுபே கடந்த போட்டியில் 3-வது வீரராக களம் இறங்கி தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
திருவனந்தபுரம் போட்டியில் சொதப்பியதால் நாளைய ஆட்டத்துக்கான வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர் இடத்தில் மாற்றம் கொண்டு வரலாம். ஆடுகள தன்மையை பொறுத்து மாற்றம் முடிவு செய்யப்படும். வெஸ்ட் இண்டீசை வீழ்த்த இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும்.
வெஸ்ட்இண்டீஸ் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தொடக்க வீரர்களான லென்டில் சிம்மன்ஸ், லிவிஸ் மற்றும் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் ஆவார்கள். அவர்கள் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.