இதனால் தான் ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தினோம்! இந்தியாவை வம்பிழுத்த இங்கிலாந்து கேப்டன் மார்கன்!

ஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இங்கிலாந்து வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ஹெச்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் 0(1) அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 9 (11) ரன்களில் வெளியேறினார்.

இதற்கிடையே வந்த ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கைகோர்த்த பீட்டர் ஹாண்ட்ஸ்கோம் 4 (12) ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர் வந்த அலெக்ஸ் கரே தாடை அடிபட்டாலும் காயத்துடன் 46 (70) ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்தவர்களில் மேக்ஸ்வெல் 22 (23) மற்றும் மிட்ஜெல் ஸ்டார்க் 29 (36) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். 48வது ஓவர் வரை போராடிய ஸ்மித் 85 (119) ரன்கள் குவித்தார். 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 223 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியில் கிரிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஹித் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாசன் ராய் மற்றும் பேரிஸ்டோவ் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 34 (43) ரன்களில் பேரிஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ராய் ஆகியோர் அதிரடி காட்டினர். 65 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ராய் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து கேப்டன் மார்கன் ரூட்டுடன் கைகோர்த்தார். இந்த ஜோடியின் விளாசலில் 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து இலக்கை எளிமையாக எட்டியது. ரூட் 49 (46) மற்றும் மார்கன் 45 (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

BIRMINGHAM, ENGLAND – JUNE 30: Virat Kohli of India and Ben Stokes of England bump into each other during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and India at Edgbaston on June 30, 2019 in Birmingham, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)

போட்டிக்குப் பின்னர் பேசிய மார்கன், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் எங்களுக்காக இன்று மைதானத்திற்கு வந்து ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான ஒன்று. இந்தியாவை இந்த மைதானத்தில்தான் வென்றோம். அதனால் நாங்கள் நம்பிக்கையுடன் களமிறங்கினோம். நாங்கள் நினைத்தை விட சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்தோம். ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரும் வெற்றியை பெறுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு. அதன்மூலம் எங்களுக்கு ஒரு சிறந்த முடிவை பெற அனைவரும் விரும்புகிறோம்” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.