விண்டீஸ் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு; பாண்டியா, கார்த்திக்கிற்கு இடம் !!

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு; பாண்டியா, கார்த்திக்கிற்கு இடம்

டிசம்பர் 31ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் விண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கான உலக ஆடும் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இர்மா, மரியா ஆகிய இரண்டு புயல்கள் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் கிரிக்கெட் மைதானங்களும் அடங்கும். இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில் மே 31-ந்தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டி20 போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக லெவன் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதற்கான உலக லெவன் அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். உலக லெவன் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான இயான் மோர்கன் வழிநடத்த உள்ளார்.

© AFP
The New Zealand pair of Luke Ronchi and Mitchell McClenaghan complete the ICC World XI line-up for the fund-raising Twenty20 International against the West Indies at Lords on May 31, the ICC said on Monday.

அதே போல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷாகிப் அப்ரிடி மற்றும் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசல், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசீத் கான் உள்ளிட்ட பலர் உலக ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்

  1. மோர்கன் (கேப்டன்), 2. தினேஷ் கார்த்திக், 3. ஹர்திக் பாண்டியா, 4. ஷாகித் அப்ரிடி, 5. சோயிப் மாலிக், 6. திசாரா பெரேரா, 7. ஷாகிப் அல் ஹசன், 8. தமிம் இக்பால், 9. ரஷித் கான், 10. லூக் ரோஞ்சி, 11. மிட்செல் மெக்கிளேனகன்.

 

Mohamed:

This website uses cookies.