இந்திய மகளிர் கிரிக்கெட்டில் சூதாட்டம்: இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளரை சூதாட்டத்துக்கு அணுகியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. போட்டிக்கிடையே பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓட்டலில் தங்கியிருந்த ஒரு பந்துவீச்சாளரை, ஜிதேந்திர கோத்தாரி, ராகேஷ் பாப்னா ஆகியோர், தாங்கள் டெல்லியை சேர்ந்த விளையாட்டு மேலாளர்கள் என்று கூறி சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த வீராங்கனையை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு கூறி, பேசியுள்ளனர். இவரை வைத்து மற்ற வீராங்கனைகளையும் சூதாட்டத்துக்குள் வளைக்க அவர்கள் திட்டம் போட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த வீராங்கனை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் பெங்களூரு போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது.

கிரிக்கெட் வீராங்கனையை சூதாட்ட புக்கிகள் சந்தித்து பேசியிருப்பது இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது.

முன்னதாக,

கடந்த மாதம் முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களைச் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த விசாரணையை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

டிஎன்பிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் ஓர் இந்திய வீரர், ஐபிஎல் வீரர், ரஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோர் பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பணத் தகராறு ஏற்பட்டதால் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. எனவே இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Back to back rendu finals la attendance podranga Dindigul Dragons! #NammaPasangaNammaGethu #TNPL2019 #DDvSMP

பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அஜித் சிங் இதுகுறித்துக் கூறியதாவது, சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் எங்களுக்குத் தகவல்கள் தெரிவித்தார்கள். அவர்களை அணுகியவர்கள் குறித்து விசாரணை செய்துவருகிறோம். வாட்சப் மூலமாகக் கோரிக்கை வந்ததால் அதுகுறித்தும் விசாரிக்கிறோம். அணி உரிமையாளர்களிடம் நாங்கள் இதுவரை விசாரணை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. டிஎன்பிஎல் போட்டிக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் உண்மையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐயிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றும் டிஎன்சிஏ சார்பில் கூறப்பட்டுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.