ஐபிஎல் ஏலம்: ஹிட்மேன் எங்களுக்கு தான், ஹிட்வுமனும் எங்களுக்கு தான்.. தட்டித்தூக்கிய மும்பை இந்தியன் அணி!

ஐபிஎல் ஏலத்தில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 1.8 கோடி ரூபாய்க்கு இந்தியன்ஸ் அணிக்கு எடுத்துள்ளது.

பெண்களுக்கான அறிமுக ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த வருடம் ஐபிஎல் இல் பங்கேற்க பல வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

பெண்களுக்கான ஐபிஎல் ஏலம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளை ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து வருகின்றன. இதில் பல வீராங்கனைகள் கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டு வருவது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கிரிக்கெட் வளர்ந்து வருவதை இது வெளிக்காட்டுகிறது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் முதல் வீராங்கனையாக ஏலம் விடப்பட்டவர் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இவரை எடுப்பதற்கு ஆரம்பத்தில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டியில் நிலவியது.

ஆரம்ப விலையாக 50 லட்சம் ரூபாய் இருந்த இவரது விலை கோடிகளில் உயர்ந்தது. ஏலம் விலை ஒரு கொடியை தாண்டியதும் ஆர்சிபி அணி விலகிக்கொண்டது. பின்னர் உத்தரப்பிரதேசம் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் 1.8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டிருக்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்.

இவருக்கு ஹிட்வுமன் என்று மற்றொரு பெயரும் உண்டு. ஏற்கனவே ஹிட்மேன் என அழைக்கப்பட்டு வரும் கேப்டன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கிறார். தற்போது மற்றொரு கேப்டன் மற்றும் ஹிட்வுமன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

அதன் பிறகு இளம் விடப்பட்ட மற்றொரு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தானா சுமார் மூன்று. நான்கு கோடி ரூபாய்க்கு ஆர்.சி.பி அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார் தற்போது வரை இதுதான் அதிகபட்சமாக இருக்கிறது.

 

Mohamed:

This website uses cookies.