டி20 போட்டியில் சைலன்ட்டாக ரோகித் செய்த இப்படியொரு தவறு; தோல்விக்கு இவர்தான் காரணமா? – கடுமையாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

பரிசோதனை என்ற பெயரில் மூன்றாவது 20 போட்டியில் குப்பை மாதிரி விளையாடினார்கள் இந்திய வீரர்கள் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் தொட்டா கணேஷ்.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் விளையாடிய மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. மூன்றாவது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முன்னணி வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் உள்ளே எடுத்து வரப்பட்டனர்.

வழக்கம்போல இந்த போட்டியிலும் இந்திய அணியின் டெத் ஓவர் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 227 ரன்கள் அடித்தது. 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை.

நல்ல ரன்ரேட்டில் விளையாடி வந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியால் குறிப்பிட்ட ஸ்கோரை எட்ட முடியவில்லை. 18.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. 49 வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றியை பெற்றது.

முன்னணி வீரர்களை வெளியில் அமர்த்திவிட்டு இளம் வீரர்களை விளையாட வைத்து பரிசோதிப்பது மற்ற தொடர்களில் சரியாக இருக்கும். ஆனால் உலக கோப்பை தொடரின் பயிற்சிக்காக நடைபெறும் இது போன்ற தொடர்களில் இந்திய அணி மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து கொண்டிருக்கக் கூடாது என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் தொட்டா கணேஷ்.

“இந்தியா அணியில் செய்த பரிசோதனை இந்தியாவுக்கே பின்விளைவை தந்திருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்டை விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இடத்தில் விளையாடியது மிகப்பெரிய தவறு. குறிப்பாக உலக கோப்பைக்கு முன்பாக இப்படி ஒரு பரிசோதனை மேற்கொண்டது முட்டாள் தனமானது. தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கிறார். அவரை வைத்துக் கொண்டு மற்ற இரண்டு பேரையும் வைத்து விளையாடுவது அர்த்தமற்றது. எதற்காக இப்படி ஒரு பரிசோதனை?. கூடுதல் போட்டிகளில் விளையாடவைத்து வீரர்களின் மனநிலையில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இதுதான் அதற்கு சரியான தருணம்.” என்று அவர் அறிவுருத்தினார்.

Mohamed:

This website uses cookies.