வர்செஸ்டர்ஷயரின் ரோஸ் நட்வெஸ்ட் டி20 தொடரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார்

வர்செஸ்டர்ஷயரின் ரோஸ் நட்வெஸ்ட் டி20 தொடரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் சிறப்பாக விளையாடியும் அந்த அணி எதிராக அணியுடன் தோல்வி அடைந்தது எதிர் அணியில் டேவிட் 118 ரன்கள் விளாசியுள்ளார் இதனால் இவர் அணி வெற்றி பெற்றது.

டேவிட் 55 பந்துகளில் 118 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 233 ரன்கள் அடித்தது.

வார்ஸெஸ்டர்ஷயர் அணி 15 ஓவர்கள் வரையும் சிறப்பாக விளையாடவில்லை அந்த அணி 15 ஓவர்களில் வெறும் 136 ரன்கள் மட்டுமே அடித்தார்கள் இதனால் கடைசி 5 ஓவர்களில் அந்த அணிக்கு 98 ரன்கள் தேவை பட்டது. பிறகு 16வது ஓவரில் வர்செஸ்டர்ஷயரின் ரோஸ் 6 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார் இருப்பினும் அந்த அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது வர்செஸ்டர்ஷயரின் ரோஸ் 26 பந்துகளில் 65 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

வர்செஸ்டர்ஷயரின் ரோஸ் நட்வெஸ்ட் டி20 தொடரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீடியோ :

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்த நாயகன் ரோஸ் பேசியது :

“என் திறமையை காட்ட இந்த போட்டி எனக்கு சரியாக உதவியது, நான் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடிக்கவும் எனக்கு இந்த போட்டி சரியாக உதவியது. என் எதிர் அணியின் பந்து வீச்சாளர் சூழல் பந்து வீசியதால் ஆறு சிக்ஸர்கள் அடிக்க சுலபமாக இருந்தது ”

ஆட்டத்தின் விவரம் :

யார்க்ஷயர் அணி : 20 ஓவர்களில் 233/6 ரன்கள் ( டேவிட் 118 )

வொர்செஸ்டர்ஷைர் அணி : 20 ஓவர்களில் 196/7 ரன்கள் ( ரோஸ் 65, கிளார்க் 51 )

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.