பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு அடிக்கப்பட்ட பந்தை பிடிக்க முயற்சித்து தோள்பட்டையில் கடும் காயம் ஏற்பட்டு வெளியேறினார் கேதர் ஜாதவ். விரைவில் இவர் குணமடைய மாட்டார் என தெரிவிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கப்பட்டார்.
இவர் உலக கோப்பை தொடருக்குள் குணமடைவதும் சற்று கடினம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் இவருக்கு பதிலாக மாற்று வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு உள்ள ஐந்து வீரர்களின் பட்டியலை நாம் எங்கு காண இருக்கிறோம்.
1. அம்பத்தி ராயுடு
33 வயதான ராயுடு 2013ம் ஆண்டு இந்திய அணிக்கு முதல் முறையாக களம் இறங்கினார். அதன்பிறகு சில தொடர்களை அவர் தவறவிட்டாலும், 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.
சந்தேகத்துடன் இருந்த நான்காவது இடத்திற்கு இவர் சரியாக இருப்பார் என நம்பப்பட்டு களமிறக்கப்பட்டார். மூன்று சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். இவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் 47 சராசரியுடன் உள்ளார். கேதர் ஜாதவ் குணமடையாவிட்டால் இவருக்கு அந்த இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.