இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவிற்கு சப்போர்ட் செய்ததை பார்த்த கோலி அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.
உலக கோப்பை தொடரின் 38 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டிக்கு முன்னர் 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நிலையில், நான்காவது இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் போராடி வருகின்றன.
பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் 9 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருந்தன. இங்கிலாந்து 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் இருந்தது.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 4ஆம் இடத்தில் நீடிக்கும். இங்கிலாந்து 5ஆம் இடத்திலேயே இருக்கும். இதனால் இந்திய அணிக்கு சப்போர்ட் செய்ய மைதானத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதலை போல எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் உற்சாகமாக வீரர்களுக்கும் உற்சாகம் கொடுத்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 337 ரன்கள் எடுத்தது. இலக்கு சற்று கடினமாக இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை உணர்ந்த பாகிஸ்தான் ரசிகர்கள் சற்று கலக்கத்துடன் காணப்பட்டனர்.
வழக்கத்திற்கு மாறாக பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணிக்கு சப்போர்ட் செய்வதை கண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் வெளியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு சற்றும் புரியவில்லை. இத்தனை பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவிற்கு சப்போர்ட் செய்வது புதுவித உணர்வாக இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் அண்டை நாடுகள் எங்களுக்கு சப்போர்ட் செய்தால் இன்னும் ஒரு உற்சாகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.