லார்ட் மைதானத்தில் சச்சினுடன் சேர்த்து விராட் கோலிக்கு கிடைத்த பெரும் கௌரவம்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்பரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று தொடங்கி வரும் ஜூலை மாதம் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக்-அவுட் போட்டிகள் என சுமார் 12 நகரங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இதில் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளன.

இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதை முன்னிட்டு, கிரிக்கெட்டின் பிறப்பிடமான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நம்பர் 1 வீரரான விராட் கோலியை கவுரப்படுத்தும் விதமாக அவரது மெழுகு சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் இந்த மெழுகு சிலை வரும் ஜூலை 15ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் இருக்கும் கோலியின் ரசிகர்கள் நேரில் சென்று பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

விராட் கோலியுடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களுக்கு விருந்து அளித்துள்ளார் இங்கிலாந்து ராணி எலிசபெத். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற கார்டன் பார்ட்டியில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டார்கள். ராணி எலிசபெத்துடன் இணைந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

உலக கோப்பை  முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிர்கொண்டது. இந்த போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி .இதன்படி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் மோர்கன் 57 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களை அடித்தார்.பின் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

ஆரம்ப முதலே தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.முக்கிய வீரர்களான அம்லா 13 ,மார்கம் 11,டூ பிளேஸிஸ் 5,டுமினி 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.டி காக் மற்றும் வான் டெர் டஸ்ஸன் மட்டும் ஓரளவு சிறப்பாக ஆடினார்கள்.பின் டி காக் 68 ரன்களிலும் , வான் டெர் டஸ்ஸன் 50 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Sathish Kumar:

This website uses cookies.