பாவம்டா இந்திய அணி,அவுங்கள திட்டுறதுல எந்த பயனும் இல்லை ; இந்திய அணிக்கு ஆதரவாக பேசிய முன்னால் வீரர் !!

பாவம்டா இந்திய அணி,அவுங்கள திட்டுறதுல எந்த பயனும் இல்லை ; இந்திய அணிக்கு ஆதரவாக பேசிய முன்னால் வீரர்..

இந்திய அணி செய்வதில் எந்த ஒரு குற்றமும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு(2023) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது.

இதனால் ஒவ்வொரு அணியும் எப்படியாவது இந்த முறை உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்று கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு , இருதரப்பு தொடர்களில் அதிகமாக பங்கேற்று அணியை செட் செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

 

குறிப்பாக இந்திய அணி இருதரப்பு தொடரில் பல்வேறு விதமான முயற்சிகளை செய்து இந்திய அணியை செட் செய்வதற்கு கடுமையாக போராடி வருகிறது.

ஆனால் இந்திய அணியின் இந்த முயற்சியை பெரும்பாலானவர்கள் விமர்சித்து வருகின்றனர் ஏன் துவக்க வீரரை லோயர் ஆர்டரில் விளையாட வைக்கிறீர்கள்..? ஏன் தேவையில்லாமல் இவருக்கு இந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்..? என்பது போன்ற கேள்வி இந்திய அணியின் மீது கடுமையாக எழுந்து வருகிறது.

 

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா போன்ற ஒரு சிலரோ இந்திய அணி செய்து வரும் இந்த முயற்சியின் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை ஏனென்றால் தற்பொழுது போதுமான வீரர்கள் இல்லை என்பதால் இந்திய அணி தங்களுக்கு கிடைத்த வீரர்களை வைத்து பல பரிசோதனைகளை செய்து பார்க்கிறது என ஆதரவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்., “இந்திய அணியின் கைகள் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது, ஏனென்றால் இந்திய அணி ஒரே பேட்டிங் ஆர்டரில் பல பேட்ஸ்மேன்களை களமிறக்கி பரிசோதித்து பார்ப்பது மிகவும் இக்கட்டானது, இதனால் நீங்கள் எல்லாரும் இந்திய அணி என்ன செய்து கொள்கிறது..? எதற்காக இவர்கள் இப்படி தேவையில்லாத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்..? இவர்கள் எல்லாம் அணியில் ஏன் இல்லை என்பது போன்ற விவாதங்கள் நமக்குள் சந்தேகமாக எழுகிறது. இதுகுறித்து நாமும் போட்டிக்கு முன்பு விவாதித்திருந்தோம்”.

 

ஆனால் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் எதிர்வரும் போட்டிகளில் இடம் பெறுவார்களா மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக இவர்களை இந்திய அணி களம் இறக்கவில்லையா என தெரியவில்லை. ஆனால் இதற்காக இந்திய அணியை நாம் குற்றம் சொல்ல முடியாது. இது அவர்களுடைய பானியம் கிடையாது.இருந்த போதும் இந்திய அணி தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை வைத்து பல்வேறு விதமான சோதனைகளை செய்து வருகின்றன. இதில் நம்முடைய மெயின் வீரர்களுக்கு எந்த ஒரு காயமும் இல்லாமல் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். இதற்காக நாம் இந்திய அணி நிர்வாகத்தை குறை கூற முடியாது,தற்போது இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்களை மாற்றி மாற்றி களம் இறக்கி விளையாடியது விமர்சனமான நிலையில் ஆகாஷ் சோப்ரா அதற்கு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.