உலகக் கோப்பையை வென்றதற்கு தோனி மட்டுமே காரணமல்ல என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று இன்றோடு 9 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதுவம் இலங்கையை இறுதி ஆட்டத்தில் வீழ்த்த தோனி அடித்த சிக்ஸர் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதது.
இந்திய அணி இலங்கையை வீழ்த்தியதற்கு இறுதிப் போட்டியில் கவுதம் காம்பீரின் பொறுப்பான ஆட்டமும் காரணம். இந்தப் போட்டியில் கவுதம் காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தோனி 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பை வென்ற நாளை கொண்டாடிய “கிரிக்இன்ஃபோ” இணையதளம் தோனி இறுதிப் போட்டியில் சிக்ஸர் அடித்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அத்துடன் இந்த ஷாட், மில்லியன் இந்திய ரசிகர்களைக் கொண்டாட வைத்தது என எழுதியது.
இதற்கு பதிலளித்த காம்பீர் ” உலகக் கோப்பையை ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திய அணியும் பயிற்சியாளர்களும் இணைந்துதான் வென்றார்கள். சிக்ஸர் மீதான உங்கள் அதீத விருப்பத்தைக் கைவிடவேண்டும்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக சரமாரியான விமர்சனங்களை காம்பீர் சமூக வலைதளங்களில் பெற்று வருகிறார்.
இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக தனது இரண்டு ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிதி கணக்கில் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள கம்பீர், இதுகுறித்து குறிப்பிடுகையில்., “மக்கள் தங்கள் நாடு அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். உங்கள் நாட்டுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதுதான் உண்மையான கேள்வி. நான் எனது நாட்டிற்காக எனது இரண்டு ஆண்டு ஊதியத்தை அளிக்கிறேன். நீங்களும் முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு மதக் குழுவின் தலைமையகம் இப்போது நாட்டில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) நோய்த்தொற்றுகளின் மிகப்பெரிய ஆதாரமாக உருவெடுத்துள்ளது. புதன்கிழமை, டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையில் கலந்து கொண்ட கிட்டத்தட்ட 8,700 பேரை மாநில அரசுகள் அடையாளம் கண்டுள்ளன, மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரையும் கண்டுபிடிப்பதற்காக ஏராளமான காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பணியாளர்களை அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.