உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்; அப்படி என்னென்ன வசதி இருக்கு தெரியுமா !!

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டிநாளை தொடங்கவுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறுவது தான் சிறப்பம்சம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் மட்டுமே 76 வீரர்களுக்கான உடற்பயிற்சியுடன் கூடிய நான்கு பிரத்தியேக டிரெஸ்ஸிங் ரூம்கள் என மிக பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது அகமதாபாத் மைதானம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மைதானம் கடந்த 1982ஆம் ஆண்டு கட்டப்பட்டது, கடைசியாக 2014ஆம் ஆண்டு இங்கு போட்டிகள் நடைபெற்றன, அதன்பிறகு மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

90,000 பேர் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் உள்ள மெல்போர்ன் மைதானம் தான் உலகின் மிகப் பெரிய மைதானமாக இருந்து வந்தது தற்போது அந்த பெருமை உடைத்து ஒரு லட்சத்திற்கும் மேல் ரசிகர்கள் அமரும் வகையில் முதன்மை மைதானமாக உருவெடுத்துள்ளது.அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் அறுபத்து மூன்று ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன, பிரதான மைதானத்தில் மட்டுமே 11 அடுகளங்கள் உள்ளன, மேலும் 8 சென்டி மீட்டர் வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாது வகையில் உடனடியாக நீரை உறிஞ்சி வெளியேற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தில் நிழல் விழாத அளவுக்கு எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அருகிலேயே உள்ளடங்கு கிரிக்கெட் பயிற்சி அகடமி, பிரம்மாண்ட உணவகம், 3டி திரையரங்கம், நீச்சல் குளம், பயிற்சிக்கு என இரண்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6 உள்ளரங்கு ஆடுகளமும்,அவற்றோடு பௌலிங் மிஷின்களும் அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர்கள் தங்குவதற்காக 50  டீலக்ஸ் அறைகளும், உள்ளது.

பல வசதிகளுடன் கூடிய ஆகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான  3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Mohamed:

This website uses cookies.