உதவித் தொகை ₹.1,00,000 வேண்டாம் : 1009 ரன் அடித்த வீரர் ப்ரனவின் நேர்மை

கடந்த வருடம் இதே சமயத்தில் 15 வயதான கிரிக்கெட் வீரர் பிரனாவ தன்வாடே யாரும் இதுவரை கிரிக்கெட் உலகில் அடித்திராத 1000 ரன்னை அடித்து உலக சாதனை புரிந்தார். உலக கிரிக்கெட் வராலாற்றில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு தனி நபர் ஒரே ஆட்டத்தில் அடித்த அதிக் அரன் இது தன.

இதனால் இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டும் பிரவனை புகழ்ந்து தள்ளியது. மும்பையைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரான அண்டர்-16 பந்தாரி ட்ராபியில் கே.சி.காந்தி பள்ளிக்காக ஆடிய பிரனவ் தன்வாடே. அந்த தொடரின் ஒரு போட்டியில் ஆர்ய குருகுலம் பள்ளிக்கு எதிரான போட்டியில் 327 பந்துகளில் 1009 ரன் அடித்து நாட் அவுட் ஆகாமல் இருந்து சாதனை படைத்தார்.

இதனால் அவரை சச்சின் டெண்டல்கர் முதல் ரோகித் சர்மா வரை அனைவரும் புகழ்ந்து தள்ளினர். மேலும், அவருக்கு பல்வேறு கம்பெனிகள் மற்றும் க்ளப்பில் இருந்து ஓப்பந்தகள் வந்தது.

மும்பை கிரிக்கெட் வாரியம் இவரது ஆட்டத்தைப் பாராட்டி 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹.10,000 உதவித்தொகை வழங்கியது. மேலும், ஏர் இந்தியா தனது கிரிக்கெட் அணியில் ஆட அவருக்கு ஒப்பந்தம் வழங்கியது. மும்பையின் முன்னனி கிரிக்கெட் க்ளப்பில் ஒன்றான தாதர்-யூனியன் அவருக்கு அழைப்பு விடுத்து க்ளப்பில் சேர கூறியது.

அதனுடன் சேர்த்து அவருக்கு இங்கிலாந்து சென்று அங்குள்ள கிரிக்கெட் சூழ்நிலைகளை அறிய ஊக்கத்தொகை கொடுத்து அனுப்ப ஏற்ப்பாடு செய்யப்பட்டது. 

மும்பை கிரிக்கெட் வாரியம் வழங்கிய ஊக்கத்தொகையை முதலில் ஏற்றுக்கொண்ட பிரனவ் தன்வாடே தற்போது வேண்டாம் என மறுத்துள்ளார். தான் ஊக்கத் தொகைக்கு ஏற்ப சரியாக செயல்படுவது இல்லை, என்னால் சரியாக தற்போது செயல்பட இயலவில்லை இதனால் அந்த ஊக்கத் தொகை எனக்கு வேண்டாம் எனக் கூறியுள்ளார் பிரனவ்.

தற்போது தாதர்-யூனியன் கிரிக்கெட் க்ளப்பில் ஆடிவரும் ப்ரனவ். மும்பையின் அண்டர்-19 உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்த ஊக்கத்தொகை வேண்டாம் அவரது தந்தை பிரசாந்த் தன்வாடே மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளா, அதில் அவர் கூறியுள்ளதாவது,Dhanawade’s father drives an auto for a living

என் மகன் அடித்த 1009 ரன்னிற்கு நீங்கள் பாராட்டியதம் உதவிசெய்ததும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது என் மகனால் சரியாக செயல்பட இயலவில்லை. சிலர் இந்த ஊக்கத் தொகையை வைத்து பாந்த்ராவில் ஒரு வீடு வாங்கி விட்டதாகவும் கூறுகின்றனர். இதனால் அவன் மிகவும் பாதிக்கபடுகிறார். அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி செய்ய சரியான வசதிகளை மட்டும் ஏற்படுத்தி தந்தால் போதும். அவன் மீண்டும் எப்போது சரியாக ஆடுகிறானோ அப்போது நீங்கள் இந்த ஊக்க தொகையை கொடுங்கள்.

என எழுதியிந்தார். அவருடைய தந்தை ஒரு ஆட்டோ ட்ரைவர் என்பது குறிப்பிடத்தக்கது

Editor:

This website uses cookies.