கவுன்ட்டியில் கோலியுடன் இணைந்து விளையாடியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்- இங்கிலாந்து பந்து வீச்சாளர்

விராட் கோலியுடன் இணைந்து விளையாடியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். கோலியுடன் இணைந்து விளையாடியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்- இங்கிலாந்து பந்து வீச்சாளர்

இந்திய சீனியர் அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக, கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாட முடிவு செய்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக சர்ரே அணியில் இருந்து விலகினார். இந்த அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரான் இடம் பிடித்திருந்தார். இவர் விராட் கோலியுடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

தற்போது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் சாம் குர்ரான் இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி என்னுடைய அணியின் சக வீரராக வர இருந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மற்ற அணி பந்து வீச்சாளர்களை பார்த்து சிரிக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

இங்கிலாந்து மண்ணில் விராட் கோலிக்கு எந்தவொரு எதிரணி பந்து வீச்சாளர்களும் பந்து வீச விரும்புவார்கள். இங்கிலாந்து ஆடுகளம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தற்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வேன்.

ஒவ்வொரு வீரர்களும் விராட் கோலி போன்ற மிகப்பெரிய வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்குள் தங்களை பரிசோதனை செய்ய வாய்ப்ப கிடைக்கும். விராட் கோலி சர்ரே அணிக்கு விளையாடவில்லை என்றதும் சக வீரர்களுக்கு கஷ்டமாக இருந்தது.

Sam Curran, Surrey “It’s been a pretty special couple of weeks. Wouldn’t have thought it at the start of the summer, thought I’d just deal with my Surrey stuff but that’s how things go, you just get on a roll and ride the rollercoaster and just try to enjoy it.

ஏனென்றால், விராட் கோலி வந்தால் அதிகமான ரசிகர்கள் வருவார்கள். அவருடைய பயிற்சியில் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பு வீணானது’’ என்றார்.

Editor:

This website uses cookies.