இதுலாம் பழகிச்சு, 2022 ஐபிஎல் தொடரில் ஏன் விலை போகவில்லை என்பதை விளக்கமாக தெரிவித்த ஆரோன் பின்ச் !!

இதுலாம் பழகிச்சு, 2022 ஐபிஎல் தொடரில் ஏன் விலை போகவில்லை என்பதை விளக்கமாக தெரிவித்த ஆரோன் பின்ச் !! 3இதுலாம் பழகிச்சு, 2022 ஐபிஎல் தொடரில் ஏன் விலை போகவில்லை என்பதை விளக்கமாக தெரிவித்த ஆரோன் பின்ச் !! 3

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் தொடருக்கான கேப்டன் ஆரோன் பின்ச்,அதற்குப் பின் நடந்த மினி ஏலத்தில் பெங்களூரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார், 2020ஆம் ஆண்டு மிக மோசமாக விளையாடியதால் இவரை 2021 மினி ஏலத்தில் எந்த ஒரு அணியும் கண்டுகொள்ளவே இல்லை.

அப்பொழுது மோசமான ஃபார்மில் இருந்ததால் ஆரோன் பின்சை கண்டுகொள்ளவில்லை என்று ஓரம் கட்டி விடலாம், ஆனால் அந்த ஐபிஎல் தொடருக்கு பின் மீண்டும் பழைய ஃபார்மில் அசத்திய ஆரோன் பின்ச்,தனது தலைமையில் 2021 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

இதுலாம் பழகிச்சு, 2022 ஐபிஎல் தொடரில் ஏன் விலை போகவில்லை என்பதை விளக்கமாக தெரிவித்த ஆரோன் பின்ச் !! 1இதுலாம் பழகிச்சு, 2022 ஐபிஎல் தொடரில் ஏன் விலை போகவில்லை என்பதை விளக்கமாக தெரிவித்த ஆரோன் பின்ச் !! 1

இதனால் சர்வதேச போட்டியில் உலகக் கோப்பை வெற்றி பெற்று கொடுத்த ஆரோன் பின்சை 2022 ஐபிஎல் தொடர் ஏலத்தில் எப்படியாவது தனது அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சில அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2022 ஐபிஎல் ஏலத்தில் ஆரோன் பின்ச் பெயர் அறிவிக்கப்பட்டபோது எந்த ஒரு அணியும் அவரை எடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை, இது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்த ஒரு கேப்டனை ஏன் ஐபிஎல் தொடரில் ஓரம்கட்டுகிறார்கள் என்ற விவாதம் பரவலாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தான் 2022 ஐபிஎல் தொடரில் விலை போகாதது குறித்து ஆரோன் பின்ச் செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பிரியமான ஒன்றாகும், கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடிய எனக்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கவில்லை இதை நினைத்து நான் ஆச்சரியம் அடையவில்லை, ஏனென்றால் 2022 ஐபிஎல் தொடரில் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், 6, 7மற்றும்8 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்வதற்கு பவர் ஹீட்டர்கள் அதிகம் இந்த ஏலத்தில் இருந்தனர். இதன் காரணமாகவே நான் விலை போகவில்லை என்று ஆரோன் பின்ச் பேசியிருந்தார்.

2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட துவங்கிய ஆரோன் பின்ச் சென்னை அணியை தவிர மற்ற அனைத்து அணைகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:
whatsapp
line