கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சற்று சுமாராக விளையாடிய காரணத்தினால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு படிப்படியாக பிரித்திவி ஷாவுக்கு பறிபோனது. தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் மிக அதிரடியாக விளையாடினார். 8 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 827 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ்
138.29 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து டெல்லிக்கு ஐபிஎல் தொடரில் மிக அற்புதமாக விளையாடினார். 8 போட்டிகளில் 308 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 8 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 166 6.49 ஆகும். அடுத்தடுத்து மிக சிறப்பாக செயல்பட்ட இவருக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய பிரித்வி ஷா
இலங்கைக்கு எதிராக நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அசத்தினார். போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய துவக்கத்தை இவரை ஏற்படுத்திக் கொடுத்தார்.இந்திய அணியின் வெற்றிக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த காரணத்தினால் ஆட்ட நாயகன் விருது பெற்று ஷாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு பேட்ஸ்மேனாக அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது
இது சம்பந்தமாக பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், சென்ற ஆண்டு பார்த்த பிரித்வி ஷா முற்றிலுமாக மாறி இருக்கிறார். அவரது பேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் தற்போது தெரிகிறது. கடந்த முறை நான் பார்த்த பொழுது நிறைய தவறுகளை அவர் செய்தார். ஆனால் தற்போது இலங்கைக்கு எதிரான நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அந்த தவறுகளை என்னால் காண முடியவில்லை.
நிறைய மாற்றங்களை அவர் தனது பேட்டியில் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். ஆப்சைடு மற்றும் லெக்சைடு என இரண்டு பக்கமும் அவர் மிக அற்புதமாக விளையாடுகிறார். பந்து வீச்சாளர்கள் தவறு செய்யும் நேரத்தில் அதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டு பவுண்டரி விளாசுகிறார். அவருடைய இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.
உலக கோப்பை டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது
இந்திய அணியில் ஓபனிங் வீரராக ரோகித் சர்மா நிச்சயமாக விளையாடப் போகிறார். அவருக்கு இணையாக உலக கோப்பை டி20 தொடரில் எந்த வீரர் விளையாடப் போகிறார் என்ற கேள்வி தற்போது நிறைய பேர் மத்தியில் உள்ளது. கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் தயாராக இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக பிரித்வி ஷா இணைந்துள்ளார். நிச்சயமாக இந்திய தேர்வு குழு இவரை மறுக்க முடியாது.
எனவே இந்திய அணியில் தற்போது நான்கு ஓபனிங் வீரர்கள் உள்ளனர். இது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. மேலும் உலக கோப்பை டி20 தொடரில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்றும் பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.