“மீண்டும் அணியில் இடம் பெற இதை செய்யப்போகிறேன்..” திட்டமிட்டு குறிவைக்கும் விக்கெட் கீப்பர்!!

மீண்டும் இந்திய அணியில் இடம்பெற இதை செய்யப்போகிறேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் திட்டம் வகுத்து வருகிறார்.

2014ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விருத்திமான் சஹா இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் விக்கெட் கீப்பராக இருந்து வந்த இவர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டு, இளம் வீரர் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக அணியில் கொண்டுவரப்பட்டது.

அதன் பிறகு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு தொடர்களிலும் ரிஷப் பண்ட் அடுத்தடுத்து சதமடிக்க, பண்ட்டின் இடம் உறுதியானது.

அடுத்த ஆறு மாதங்களில் சகா மீண்டும் குணம் அடைந்து விட்டாலும், ரிஷப் பண்ட் நன்றாக ஆடி வருவதால் சஹாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற சஹா ஒரு போட்டியில் கூட ஆட வைக்கப்படவில்லை. தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சஹா இடம்பெற்றுள்ளார். இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது மிக குறைவு என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சஹா கூறுகையில், நான் காயம் ஏற்பட்டு வெளியில் அமர்த்தப்பட்ட போது எதிர்மறையான விமர்சனங்களை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் முற்றிலும் நேர்மறையான சிந்தனையுடனும் விளையாடி வருகிறேன்.

அணியின் பிசியோ எனக்கு சிறந்த அறிவுரைகளை கொடுத்தார். 20 வயது வீரர் காயம் ஏற்பட்டால் உடனடியாக குணமாகி விடுவார். எனக்கு தற்போது 33 வயது என்பதால் குணமடைய சற்றுக் காலம் எடுக்கும் என அவர் அறிவுரை கூறினார். அதனால் தொடர்ந்து எனது முயற்சிகளை கொடுத்து வருவேன்.

தற்போது இந்தியா ஏ அணியில் எனது சிறப்பான ஆட்டத்தை தந்து வருகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்து மீண்டும் அணியில் இடம் பெற முயற்சிப்பேன் என்றார்.

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி ஆடிவரும் போட்டியில் விருத்திமான் சஹா இடம்பெற்று ஆடி வருகிறார். இந்திய ஏ அணியில் அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக ஆடினால் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் பேசினார்.

Mohamed:

This website uses cookies.