சஹாவிற்கு பதில் ரிஷப் பன்ட் ஆடட்டும் என கம்பிர் கூறியுள்ளார்.
இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில் சாதித்து கிங்ஸ்டன் மைதானத்தில் இந்தியா ‘கிங்’ என நிரூபிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விண்டீஸ் சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் 318 ரன்னில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் இன்று துவங்குகிறது. துவக்கத்தில் மயங்க் அகர்வால், லோகோஷ் ராகுல் ஜோடி மீண்டும் களமிறங்க உள்ளது. ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, கேப்டன் கோஹ்லி ஏமாற்றினாலும் ரகானே, 81, 102 என ரன்கள் விளாசினார்.
ஹனுமா விஹாரி தன் பங்கிற்கு 93 ரன்கள் எடுத்ததால், ரோகித் சர்மா இடம் பெறுவது சந்தேகம் தான். விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. இத்தொடரில் ஒரு அரைசதம் மட்டும் அடித்தார் (0, 4, 65, 20, 0, 24, 7) என்றாலும், தொடர்ந்த ஒரே மாதிரியாக அவுட்டாகி ரசிகர்களை வெறுப்பேற்றுகிறார்.
பவுலிங்கில் எதிர்பார்த்தது போலவே இந்திய ‘வேகங்கள்’ கைகொடுக்கின்றனர். இஷாந்த் சர்மா 8, ‘புயல்’ பும்ரா 6, முகமது ஷமி 4 என, முதல் டெஸ்டில் மொத்தம் 18 விக்கெட் சாய்த்தனர். இது மீண்டும் தொடரும் பட்சத்தில் இந்திய அணி கோப்பை வாய்ப்பு எளிதாகும்.
ஜடேஜா ‘ஆல் ரவுண்டர்’ திறமையை சரியாக வெளிப்படுத்துகிறார். இதனால் அஷ்வினுக்கு அணியில் இடம் கிடைக்காது எனத் தெரிகிறது.
விண்டீஸ் அணி சொந்த மண்ணில் மோசமாக சொதப்புகிறது. இரு இன்னிங்சிலும் ஒரு விண்டீஸ் பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப் கைவிடுகின்றனர். ராஸ்டன் சேஸ் மட்டும் சற்று ஆறுதல் தருகிறார். மற்றபடி கேப்டன் ஹோல்டரும் ரன் சேர்க்கத் தவறுகிறார். பவுலிங்கில் கீமர் ரோச் (5 விக்.,), கேபிரியல் (4) என இரண்டு ‘வேகங்கள்’ பவுலிங்கில் ஆறுதல் தருகின்றனர். சுழலில் ராஸ் சேஸ் விக்கெட் வீழ்த்துகிறார்.
இது குறித்து பேசிய கௌதம் கம்பீர்…
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சதம் அடித்திருக்கிறார். மேலும் சராசரியாக 48 வைத்திருக்கிறார். அதனால் கண்டிப்பாக இவர் டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும். ரிஷப் பண்ட் ஆடட்டும் விருத்திமான் சஹா காத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்
மேலும் காஷ்மிர் குறித்து..
இது சில நபர்கள் வாழ்வில் முதிர்ச்சி இல்லாமல் இருப்பர். இதே நிலையை கிரிக்கெட்டிலும் தொடர்வர். அப்ரிதி மனதளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்ற எனது சந்தேகத்தை நிரூபித்துவிட்டார். இவருக்கு உதவ, ‘ஆன் லைனில்’ மழலையர் பள்ளியை தொடர்பு கொள்ள உள்ளேன். மற்றபடி, இவர் குறித்து வேறு எதுவும் கூற விரும்பவில்லை. இவர் அரசியலில் சேர விரும்பினால், இணையட்டும். ஆனால், இதற்கு முதிர்ச்சி அடைந்த நபர்கள் மட்டும் தான் தேவை,’’ என்றார்.