எனக்கு வந்த கொரோனாவிற்கு இந்த அணி வீரர்கள்தான் காரணம்! விருதிமான் சஹா அதிர்ச்சி பேட்டி

மொத்தமாக 60 போட்டிகளைக் கொண்ட ஐபிஎல் தொடர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 29 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்து கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் தற்போதைக்கு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விருத்திமான் சஹா தனக்கு எப்படி கொரோனா வந்தது என்று கூறியுள்ளார்.

சென்னை அணி வீரர்களுடன் தொடர்பில் இருந்தேன்

கடந்த மாதம் 28ஆம் தேதி அருண் ஜெட்லி மைதானத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியின் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த போட்டி நடந்த வேளையில் சென்னை அணி வீரர்களுடன் நான் தொடர்பில் இருந்தேன்.

சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதற்கு அடுத்ததாக சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. எனவே எனக்கும் அவர்கள் மூலமாக தான் கொரோனா தொற்று வந்து இருக்கும் என தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் சரியாக நடக்கவில்லை

சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது அதன் காரணமாக விளையாடும் வீரர்களுக்கு அவ்வளவாக எந்த தொற்றும் ஏற்பட வில்லை. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சரியாக நடக்கவில்லை என்று தான் கூற வேண்டும். விளையாடும் வீரர்களை தவிர்த்து மற்ற நபர்களை மைதானங்களுக்கு அனுமதித்து இருக்கக் கூடாது. அதன் காரணமாகவே வீரர்களுக்கு மிக எளிதாக கொரோனா தொற்று ஒட்டிக் கொண்டது என்று விரித்திமான் சஹா கூறியுள்ளார்.

தற்பொழுது விருத்திமான் சஹா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து விட்டார். தற்பொழுது தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஒரு வீரராக இவரும் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.