ரிஷப் பண்ட கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முதல் தற்போது வரை இந்திய அணிக்கு முதன்மையான டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக கருதப்படுகிறார். அதன் காரணமாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தற்பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இளம் வயதிலேயே அனைவரின் நம்பிக்கையையும் பெற்ற ரிஷப் பண்ட் தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் நம்பிக்கையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்பொழுது ரிஷப் பண்ட் குறித்து பிராட் ஹாக் பெருமையாக ஒரு சில விஷயங்களை பேசி உள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு சூப்பர் ஸ்டாராக வலம் வருவார்
ரிஷப் பண்ட் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொண்டு போகிறார். குறிப்பாக அதிரடியாக ஆடும் அவரது ஆட்டம் அனைவரது பேசுபொருளாக இருக்கிறது. மிக பந்துவீச்சாளர்களை சிறிதும் பயமின்றி எதிர்கொள்கிறார்.
நிச்சயமாக அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் முதன்மையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக கருதப் படுவார் என்றும், அவரை அவ்வளவு எளிதில் யாரும் புறக்கணிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பமுடியாத பல சாதனைகளை அவர் கூடிய விரைவில் நிகழ்த்தி காட்டுவார் என்றும் நம்பிக்கை பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
அதிரடி ஆட்டத்தை மேற்கொள்வதே அவருக்கு சரியாக இருக்கும்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாட இருக்கிறது. இனிவரும் தொடர்களில் அவர் வழக்கமான அதிரடி ஆட்டத்தை மேற்கொள்வாரா அல்லது சூழ்நிலைக்கு தகுந்தவாறு தடுப்பாட்டத்தை மேற்கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனால் என்னை பொறுத்த வரையில் அவருக்கு தடுப்பாட்டம் சரியாக இருக்காது, அவர் எப்பொழுதும் போல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாட வேண்டும். எப்போதுமே அவர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவராக இருக்க வேண்டும் என்றும் பிராட் ஹாக் வலியுறுத்தியுள்ளார்.
தற்பொழுது உலகச் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 217ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதில் ரிஷப் பண்ட் 4 ரன்களுக்கு கைல் ஜேமிசன்
பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்திருந்தார்.நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.