இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி நிச்சயமாக வென்றுவிடும் ஆஸ்திரேலிய கேப்டன் நம்பிக்கை !!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் இறுதிப்போட்டியில் நிச்சயமாக நியூசிலாந்து அணியை இந்திய அணி வென்றுவிடும் என்று தற்பொழுது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியை விட வலிமையான அணி இந்தியா தான், எனவே இந்தியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கூறியிருக்கிறார். தற்பொழுது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி வழக்கமான இங்கிலாந்து அணி கிடையாது. இளம் வீரர்களைக் கொண்ட அணியாக அந்த அணி விளையாடியது.
எனவே அந்த அணியை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை நிச்சயமாக வீழ்த்தி விடும் என்று எண்ணி விடக் கூடாது. இங்கிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி பலம் வாய்ந்த அணி. அதனடிப்படையில் நியூசிலாந்து அணியை விட வலிமையான அணி இந்திய அணி, எனவே இந்திய அணி தனது பலத்தால் நிச்சயமாக வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார்.
டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய அணி
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அதன் பின்னர் அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரைக் கைப் பற்றியது என அடுத்தடுத்து இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது.
இந்திய அணி வீரர்கள் அவர்களுடைய வழக்கமான ஆட்டத்தை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்தினாலே நிச்சயமாக நியூசிலாந்து அணியை மிக எளிதாக வீழ்த்தி விட முடியும் என்று இறுதியாக ஆஸ்திரேலிய அணி கேப்டன்டிம் பெயின் கூறியுள்ளார்.
நாளை மறுநாள் நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டனில் இந்திய நேரப்படி 3:30 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.