உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்ட ஜடேஜா!

வருகிற ஜூன் மாதம் 18 ஆம் தேதி உலக டென்னிஸ் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மிக ஆரவாரமாக நடைபெற உள்ளது.2 ஆண்டுகளாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அதனுடைய இறுதிகட்டத்தை தற்பொழுது அடைந்துள்ளது.

இந்திய அணி தற்போது மும்பையில் இரண்டு வாரம் தனிமையில் உள்ளனர். தனிமை காலம் முடிந்தவுடன் அவர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் நியூசிலாந்து அணி வருகிற ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

எனவே இவர்கள் இருவரும் வருகிற ஜூன் 18-ஆம் தேதி களத்தில் சந்திக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜெர்சியை வெளியிட்ட ஜடேஜா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் ஜெர்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் சில நாட்களாக யோசித்து வந்தனர். அவர்கள் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ரவீந்திர ஜடேஜா தற்போது தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து புகைப்படமாக வெளியிட்டார்.

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி வீரர்கள் முன்னாள் இந்திய அணியின் ஜெர்சியை போல வடிவமைக்கப்பட்ட புதிய ஜெர்சியை அணிந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை விளையாடினார்கள்.

அதேபோல தற்போது முன்னாள் இந்திய அணி பயன்படுத்திய டெஸ்ட் ஜெர்சியை போல வடிவமைக்கப்பட்ட புதிய ஜெர்சியை வருகிற ஜூன் 18-ஆம் தேதி நடக்க இருக்கின்ற உலகச் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அணிய இருக்கின்றனர். தற்பொழுது இந்த செய்தி அனைத்து இந்திய ரசிகர்களையும் உற்சாகப்படுத்துயுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள ஜடேஜா

ஆஸ்திரேலிய தொடரில் காயம் ஏற்பட்ட காரணத்தால் தொடரில் இருந்து வெளியேறினார். அதனால் அவரால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது. காயத்திலிருந்து மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய இவரை மீண்டும் இந்திய அணி நிர்வாகம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும்அதன் பின்னர் நடக்க இங்கிலாந்துக்கு எதிராக இருக்கின்ற டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட தேர்ந்தெடுத்துள்ளது.

இங்கிலாந்து தொடரில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் நிச்சயமாக இந்திய அணியில் ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.