இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் கடைசியாக ஜஸ்பிரித் பும்ரா இசாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் இணைந்து விளையாடினார்கள்.
அதன் பின்னர் இவர்கள் மூவரும் இணைந்து விளையாடும் படி போட்டிகள் அமையவில்லை. ஏதேனும் ஒரு வகையில் இவர்களில் ஒருவர் விளையாட முடியாமல் போனது. இவர்கள் மூவரும் இணைந்து தற்போது இறுதிப்போட்டியில் விளையாட முழுத் தகுதியுடன் இருக்கின்றார்கள். இருப்பினும் இதில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக வேறு ஒரு வீரர் நாளை களமிறக்க படுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இரண்டு ஸ்பின் பந்து வீச்சாளர்கள் இருக்கும் பட்சத்தில் இஷாந்த் சர்மா இடம் கேள்விக்குறி
இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நாளைய போட்டியில் நிச்சயமாக 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின் பந்து வீச்சாளர் என்கிற திட்டத்துடன் இந்திய அணி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் ஒரு வேளை விளையாடினால், நிச்சயமாக 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுதான் இந்திய அணி களம் இறங்கும். அதில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகிய இரு வீரர்களும் நிச்சயமாக களம் இறங்குவார்கள்.
எனவே மீதமுள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் இஷாந்த் சர்மாவை விளையாட வைப்பதை விட முகமது சிராஜை விளையாட வைப்பது சிறந்த யுக்தி என இந்திய நிர்வாகம் கருதுகிறது.
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி கொடுத்த ஹின்ட்
இஷாந்த் சர்மாவுக்கு முழங்கையில் சிறிய பிரச்சனை இருப்பதால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி கருதுகிறார்கள்.
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட இவர்கள் இருவரும் இறுதிப்போட்டியில் முகமது சிராஜ் விளையாடப் போகிறார் என்ற ஹின்ட்டை கொடுத்தார்கள். எனவே நாளைய போட்டியில் இவர் நிச்சயமாக இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தற்போது உறுதியாகியுள்ளது.
முகமது சிராஜ் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் மிக சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்றார், எனவே வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் நாளைய போட்டியில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தன்னுடைய முழு பங்களிப்பை வழங்குவார் என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.