உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இவர்கள்தான் மாஸ் காட்டுவார்கள்! மைக்கேல் வாகன் பேச்சு

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் வருகிற ஜூன் 18ம் தேதி நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மிக சிறப்பாக விளையாட போகும் சிறந்த மூன்று வீரர்களை தற்போது மைக்கேல் வாகன் தேர்ந்தெடுத்துள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டிருந்த வீரர்கள் ரிஷப் பண்ட், ஜேமிசன் மற்றும் பிஜே வாட்லிங் ஆகியோர் ஆவர்.

ரிஷப் பண்ட் ஜேமிசன் மற்றும் பிஜே வாட்லிங்

இது குறித்து அவர் விளக்கம் அளிக்கையில், இந்திய அணிக்காக சென்ற ஆண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இந்த ஆண்டு நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து தொடர் வரை இந்திய அணிக்கு எப்பொழுது நெருக்கடி ஏற்படுகிறதோ அப்பொழுது ரிஷப் பண்ட் ஆபத்பாந்தவனாக வந்து இந்திய அணியை காப்பாற்றுகிறார்.மேலும் இவர் தற்பொழுது மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். இங்கிலாந்து மைதானங்களில் அவர் மிக சிறப்பாக விளையாடி அதை நாம் இதற்கு முன்பு கண்டிருக்கிறோம் எனவே இறுதிப் போட்டியில் அவரது பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று விளக்கமளித்துள்ளார்.

மறுபக்கம் ஜேமிசன் நியூசிலாந்து அணைக்காக தனது முதல் போட்டியில் இருந்து தற்போது வரை மிக சிறப்பாக விளையாடி 36 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் அவர் ஒரு முக்கிய வீரராக நின்று நியூசிலாந்து அணிக்கு பல திருப்புமுனைகள் ஏற்படுத்தியிருக்கிறார். எனவே அவரது ஆட்டம் இந்திய அணிக்கு நெருக்கடி தரும் வகையில் இருக்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இறுதியாக பிஜே வாட்லிங்க் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கிறார். இதுவரையில் நியூஸிலாந்து அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய அவர், தனது இறுதிப் போட்டியில் கண்டிப்பாக தனது முழு பங்களிப்பை வழங்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எனவே அவரது பேட்டிங் எதிர்பார்ப்பதைவிட சற்று அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் நிச்சயமாக இந்த மூன்று வீரர்களும் நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முக்கிய வீரர்களாக அவர்களது அணிக்கு விளையாடுவார்கள் என்று மைக்கேல் வாகன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.