கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி; இந்திய வீரர்கள் மாஸ் !!

கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி; இந்திய வீரர்கள் மாஸ்

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் குறித்த ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் இந்திய வீரர்களே கோலோச்சுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள், சிறந்த கேப்டன், அதிகமான விக்கெட்டுகள் என அனைத்திலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 2010 முதல் 2019-ம் ஆண்டுவரை சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலியும், அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக தமிழகத்தின் ரவிச்சந்திரஅஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விராட்கோலி தனது ஓய்வு காலத்துக்குப்பின்பும் 2010-2019ம்ஆண்டு அவரின் நினைவுகளில் நிச்சயம் தவழக்கூடும். கடந்த 2010-ம் ஆண்டு கிரிக்கெட்உலகில் அறிமுகமாக கேப்டனாக உயர்ந்த கோலி, இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரையிலும், உலகக்கோப்பை அரையிறுதி வரையிலும் அழைத்துச்சென்று தன்னை வெற்றிகரமானகேப்டனாகவே நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனது பேட்டிங் திறமையால் விராட்கோலி கடந்த 10 ஆண்டுகளில் தனி முத்திரை பதித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 11 ஆயிரத்து 125 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் அதிகமான சதங்கள் அடித்தவராகக் கோலி 42 சதங்களுடன் உள்ளார்.

விராட் கோலியைக்காட்டிலும் 3 ஆயிரம் ரன்கள் குறைவாக ரோஹித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார்.

43 சதங்கள், 52 அரைசதங்கள் அடித்துள்ள விராட்கோலி 35 முறை ஆட்டநாயகன் விருதுகள், 7 முறை தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் விராட்கோலி 4 ஆயிரத்து 152 ரன்கள் பவுண்டரி மூலம் கிடைத்துள்ளன, அதாவது ஆயிரத்து 38 பவுண்டரிகளை கோலி அடித்துள்ளார். பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ள கோலி 117 கேட்சுகளையும் ஒருநாள் போட்டியில் பிடித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் சென்று 5 ஆயிரத்து 775 ரன்கள் சேர்த்துள்ளார். இதை இதுவரை எந்தவீரர்களும் சேர்க்கவில்லை. அதேபோல் 22-க்கும் அதிகமான சதங்களைகோலி அடித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின் தன்னை மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வந்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அவரின் திறமை ஒளிர்ந்தது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-வது விக்கெட், 100-வது விக்கெட், 150 விக்கெட், 200 வது விக்கெட், 250-வது விக்கெட், 300 விக்கெட் மற்றும் 350 விக்கெட்டுகளை மிக விரைவாக எட்டியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.