வீடியோ: வித்யாசமான சைகை செய்த விண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்.. கெட்ட வார்த்தையில் திட்டி அனுப்பிய ரோகித் சர்மா!

இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடர் சென்னை நடைப்பெற்ற முதல் போட்டியில் இருந்து துவங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இந்தியா தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 36(56), லோகேஷ் ராகுல் 6(15) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த விராட் கோலி 4(4) ரன்களில் வெளியேறி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

The Indian skipper Virat Kohli had a rare off day as he could only score four runs in the ongoing first One Day International against the West Indies at MA Chidambaran Stadium. Kohli was trying to run the ball towards the third man for a single against Sheldon Cottrell but got an inside edge which chopped back on to the stumps.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 70(88), ரிஷப் பன்ட் 71(69) ஜோடி நின்று விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் மட்டுமே குவித்தது.

மேற்கிந்திய தரப்பில் செல்டன் கார்ட்டல், கீமோ பவுள் மற்றும் அல்ஜாரியா ஜோசப் தலா 2 விக்கெட்கள் குவித்தனர். இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 102*(151) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஷிம்ரான் ஹிட்மையர் 139(106) ரன்கள் குவித்து அணியின் வெற்றினை உறுதி செய்தார். ஆட்டத்தின் 47.5-வது ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி கனியை பறித்தது.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

 

Sathish Kumar:

This website uses cookies.