நாராயணா.. இந்த கொசுவ மருந்தடிச்சு கொள்ளுங்கடா! செம்ம காண்டான கிரிஸ் கெய்ல்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலை மரண கலாய் கலாய்த்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமான அனைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் நேரலையில் படுபிஸியாக உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அப்படி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ஈடுபட்ட போது இந்திய சுழற்பந்துவீச்சாளர் சஹாலை கலாய்த்துள்ளார்.

Yuzvendra Chahal was recently roasted by India skipper Virat Kohli and opener Rohit Sharma over his hilarious Tik Tok videos and now Chris Gayle as trolled the 29-year-old for the same.

சமூக வலைதளத்தில் சஹால் பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் தனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்த கெயில், அவரை சமூக வலைதளத்தில் ப்ளாக் செய்யப்போவதாகவும் கூறினார். இதுகுறித்து கெயில் கூறுகையில், “நான் டிக் டாக்கிடம் உன்னை உண்மையாகவே ப்ளாக் செய்யும்படி தெரிவிக்கப்போகிறேன்.

சமூக வலைதளத்தில் நீ அதிகம் வெறுப்பேற்றுகிறாய். இப்போதே நீ சமூக வலைதளத்தில் இருந்து வெளியேற வேண்டும். சஹாலால் நாங்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டோம். இனிமேல் என் வாழ்நாளில் நான் உன்னை பார்க்கவே கூடாது. நான் இப்போதே உன்னை ப்ளாக் செய்துவிடுகிறேன்” என்றார்.

சஹாலின் சமூக வலைதள வீடியோக்களால் அவருடன் கிரிக்கெட் விளையாடிய வீரர் ஒருவர் காண்டாவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சஹாலின் வீடியோக்களால் கடுப்பான ராயல் சாலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி அவரை கோமாளி என்றார்.

Earlier, Chahal was roasted by India skipper Virat Kohli and opener Rohit Sharma over his hilarious Tik Tok videos and now Chris Gayle as trolled the 29-year-old for the same.

கோலி, டிவிலியர்ஸ் உடன் இன்ஸ்டா நேரலையில் பேசிய போது, “ நீங்கள் சஹாலின் டிக் டாக் வீடியோக்களை பார்த்துள்ளீர்களா? இல்லை என்றால் கண்டிப்பாக சென்று பாருங்கள். அப்படி பார்த்தால், அவருக்கு 29 வயதாகிறது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். சரியான கோமாளி” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.