புவனேஸ்வர் குமார் மற்றும் குல்திப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை கேள்வி எழுப்பியுள்ள ஆகாஷ் சோப்ரா!

புவனேஸ்வர் குமார் மற்றும் குல்திப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை கேள்வி எழுப்பியுள்ள ஆகாஷ் சோப்ரா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ராவும் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புவனேஸ்வர் குமார் அணியில் இடம் பெறாதது மிக ஆச்சரியமாக உள்ளது

புவனேஸ்வர் குமார் சமீப சில வருடங்களாகவே அதிக அளவில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறார். அப்போது மட்டும் தான் வந்து இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் கடைசியாக விளையாடிய 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அதன் பின்னர் தற்போது வரை புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது சோகமான செய்தி.

தற்பொழுது காயம் குணமடைந்து ஐபிஎல் தொடர்களில் மிக சிறப்பாக பந்துவீசினார். இடையே ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் மீண்டும் வந்து மிக அற்புதமானவை பந்து வீசினார். கட்டாயமாக அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சேர்க்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது பெயர் ஆச்சரியப்படும் படியாக இடம்பெறவில்லை.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, புவனேஸ்வர் குமார் எவ்வளவு சிறப்பாக பந்தை ஸ்விங் செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு ஒரு தூணாக துணை நிற்பார். குறிப்பாக ஒரு பெரிய அணியைக் எடுத்துக்கொண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் ஒரு வீரராக இவர் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இறுதிப் போட்டியில் அவர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அதற்கு பின்னர் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இதே அணிதான் விளையாடப் போகிறது. எனவே இவரை அணியில் ஒரு வீரராக எடுத்திருந்தால் குறைந்த பட்சம் ஒரு இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் இவரை விளையாட வைத்திருக்கலாம். இவரை இந்திய அணி ஏன் புறக்கணித்தது என்று தெரியவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா குல்தீப் யாதவ் இடம்பெறாதது தனக்கு மீண்டும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாடி உள்ளார். குறிப்பாக 2019ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஒரு ஃபைவ் விக்கெட் ஹால் எடுத்து அந்த போட்டியின் வெற்றிக்கு பங்களித்தார். இவர் நிச்சயமாக இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் முதல் ஸ்பின் பவுலர் ஆக களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு பின்னர் இவருக்கு எந்தவித வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.

தற்பொழுது இறுதிப்போட்டியில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால் இவரை இந்திய அணி புவனேஸ்வர் குமார் போல புறக்கணித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா இறுதியாக கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.