அந்த பையன சீண்டிப்பாத்தா.. சேதாரம் உங்களுக்கு தான்! ஆஸ்திரேலிய வீரர்களை எச்சரித்த ராகுல் டிராவிட்!
இந்திய அணியில் இவரை சீண்டுவது ஆஸ்திரேலிய அணிக்கு தான் ஆபத்தாக முடியும் என மேத்தியூ வேட் கமெண்ட் அடித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் ராகுல் டிராவிட்.
வருகின்ற டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணைகளும் இரு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுவிட்டன. இருப்பினும் இந்தியாவில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தால் இந்த தொடரானது நடைபெறும் என முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இருந்து இந்தியாவையும் இந்திய வீரர்களையும் வார்த்தைகளால் வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தொடங்கிவிட்டனர். ஒரு தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் இவ்வாறு வார்த்தைகளால் வம்பிழுத்து மனரீதியாக தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய உடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை வம்பிழுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் விராத்கோஹ்லி ருத்ரதாண்டவம் ஆடினார்.
தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் மெத்தியூ வேட் இந்திய அணி கேப்டன் விராட் கோலி குறித்து கமெண்ட் அடித்துள்ளார். அதாவது, “விராட் கோலியை நாம் சீண்டக்கூடாது சீண்டினால் அதை அவர்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம். அவர்கள் ஆஸ்திரேலிய வரட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என்கிற பாணியில் அவர் கமெண்ட் அடித்து இருந்தார்.
பொதுவாக அமைதி காத்து வரும் ராகுல் டிராவிட் இம்முறை ஆஸ்திரேலிய தொடர் குறித்தும், மேத்யூ வேட் அடித்த கமென்ட்-க்கும் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “விராட் கோலி அவ்வாறே வளர்ந்திருக்கிறார். ஆக்ரோஷம் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதே போல போட்டியில் சீண்டியவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை சீண்டினால் மிகவும் ஆக்ரோஷம் அடைந்து எவ்வாறு தனது பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்துவார் என பலமுறை நாம் கண்டிருக்கிறோம். அவரை ஆக்ரோஷ படுத்தினாலும், அமைதியாக இருந்தாலும் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என தெரியவில்லை. எதற்க்கும் அவர் தயாரானவர்.”என்றார்