என்னுடைய கடைசி போட்டியில் என்னை நீ பாதியிலேயே விட்டு விட்டாய்; தோனியின் உருக்கமான பேச்சை ஞாபகப்படுத்திய இஷாந்த் ஷர்மா !!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டியின் ஓய்வு அறிவிக்கும்போது நடந்த உணர்ச்சிமிக்க சம்பவத்தை ஞாபகப்படுத்தினார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்காக அனைத்துவிதமான தொடர்களிலும் கோப்பையை வென்று அசத்தினார். அணியை மிகத் திறமையாக வழிநடத்தி பலவிதமான வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார் அப்பேர்ப்பட்ட தல தோனி தனது 90-வது டெஸ்டின் போது ஓய்வை அறிவித்தார்.

இதுபற்றி இஷாந்த் ஷர்மா கூறியதாவது, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் பொழுது தோனி ஓய்வு அறிவிப்பார் என்று எங்களுக்கு தெரியாது, சொல்லப்போனால் யாருக்குமே தெரியாது, 2014-2015ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினோம்ம் அதில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்து தோனி தனது ஓய்வை அறிவித்தார்.

எனக்கு அப்பொழுது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் ஊசியின் மூலம் மருந்து ஏற்றிக்கொண்டு தான் விளையாடினேன், அப்பொழுது ஒரு அளவிற்கு மேல் என்னால் விளையாட முடியவில்லை. அப்பொழுது நான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனியிடம் சென்று என்னால் இதற்குமேல் முடியவில்லை என்று கூறினேன், அப்பொழுது தோனி என்னைப் பார்த்து நீ இதற்கு மேல் பந்து வீசத் தேவையில்லை என்று கூறினார், மேலும் நீ என்னை பாதியிலேயே விட்டு விட்டாய் என்று கூறினார், அப்பொழுது எனக்கு அது புரியவில்லை பின் மீண்டும் அவர் அதுபற்றி விரிவாக கூறியதாவது, என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் என்னை பாதியிலேயே நீ விட்டு விட்டாய் என்று கூறினார்.

இதுபற்றி இஷாந்த் ஷர்மா கூறியதாவது எனக்கு மட்டும் முன்னரே தோனி ஓய்வு அறிவிப்பது பற்றி தெரிந்திருந்தால், அந்த வலியை நான் பொருட்படுத்தாமல் விளையாடி இருப்பேன் என்று கூறினார்.

தோனி 100வது டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு இன்னும் சில போட்டிகள் தான் மீதமுள்ள நிலையில் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது 90 ஆவது டெஸ்ட் போட்டியிலேயே ஓய்வு அறிவித்தார், தோனி ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் மற்றும் தன்னலம்மிக்க ஒரு சிறந்த கேப்டன் என்று கூறினார்.மேலும் அவர் கூறியதாவது விருத்திமான் சஹா வை சிறப்பாக தயார் செய்ய வேண்டும் என்றும் இறுதியாக தோனி என்னிடம் கூறினார்.

Mohamed:

This website uses cookies.