இனிதான் அவருடைய ஆட்டமே ஆரம்பிக்கபோகுது;இந்திய வீரரை பாராட்டி தள்ளிய டேல் ஸ்டைன் !!

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி இனிமேல் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15ஆம் தேதி ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரமும் அதிர்ச்சியாகவும் வகையில் தலை சிறந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டெஸ்ட் தொடர் கேப்டன்ஷிப் ராஜினாமா செய்தார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என தோல்வியை தழுவிய அடுத்த 24 மணி நேரத்தில் விராட் கோலி இந்த அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த டெஸ்ட் தொடர் கேப்டனாக கருதப்படும் விராட் கோலி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக பயணிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்த்த நிலையில், விராட் கோலி தனது கேப்டன்ஷிப்பை ராஜினாமா செய்தது குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

அந்தவகையில் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது விராட்கோலி குறித்து தனது கருத்தை பேசியிருந்தார்.

அதில், என்னை பொருத்தவரை பயோ பபில் வாழ்க்கை விராட் கோலிக்கு மிகப்பெரும் நெருக்கடியை கொடுத்து விட்டது, மேலும் விராட் கோலியின் மீது அதிக பொறுப்பு சுமை உள்ளது ஒரு கேப்டனாகவும் ஒரு குடும்பத் தலைவராக அவர் அனைத்தையுமே சமாளிக்க வேண்டும், குடும்பத்தைப் பார்க்காமல் வெறும் கிரிக்கெட், பயணம் என்று சுற்றிக் கொண்டிருந்தால் அது குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்தை உருவாகும், விராட் கோலிக்கு குடும்பம் உள்ளது அவர் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கிரிக்கெட், கேப்டன்ஷிப் என்று திரிந்தால் விராட் கோலி சுயநலம் உள்ளவர் ஆகிவிடுவார், ஆனால் விராட் கோலி அனைத்தையும் விட தனது குடும்பமே முக்கியம் என்று இந்த முடிவை எடுத்துள்ளார்.இது விராட் கோலிக்கு தனது குடும்பத்தின் மீதும் பேட்டிங்கின்மீதும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும், விராட் கோலியின் இந்த முடிவால் விராட் கோலியின் பேட்டிங்கில் இன்னும் அதிக மாற்றம் தென்படும் என்று டேல் ஸ்டெய்ன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.