முட்டாள்தனமான முடிவால் சூரியகுமார் யாதவின் கிரிக்கெட் கரியரை நாசம் செய்து விடாதீர்கள் ; இந்திய அணிக்கு கோரிக்கை வைத்த முன்னாள் வீரர் !!

இடது கை பேட்ஸ்மேனை அணியில் இணைக்க வேண்டும் என்பதற்காக சூரியகுமார் யாதவின் கிரிக்கெட் கரியரை காலி செய்து விடாதீர்கள் என சபா கரீம் தெரிவித்துள்ளார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

 

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவை ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி விளையாட வைத்து வருகிறது, ஆனால் இடதுகை பேட்ஸ்மேன் காம்பினேஷன் அணிக்கு தேவை என்பதால் ரிஷப் பண்டை 4வது பேட்டிங் ஆர்டரில் விளையாட வைத்து சூரியகுமார் யாதவை ஐந்தாவது பேட்டிங் பொசிஷனில் இந்திய அணி களமிறக்கி விளையாடுகிறது.

ஆனால் சூரியகுமார் யாதவால் ஐந்தாவது பேட்டிங் ஆர்டரில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாட முடியவில்லை, இதன் காரணமாக சூரியகுமார் யாதவை டி20 தொடர் போல் 3 அல்லது 4வது பேட்டிங் ஆர்டரிலீயே விளையாட வைக்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபாக் கரீம், இடதுகை பேட்ஸ்மேன் காம்பினேஷன் அணிக்கு தேவை என்பதால் சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் கரியரை காலி செய்து விடாதீர்கள் என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து சபாக் கரீம் தெரிவித்ததாவது,“என்னை பொறுத்தவரையில் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் நான்காவது பேட்டிங் ஆர்டரில் விளையாடிருக்க வேண்டும், இடது கை பேட்டிங் காம்பினேஷன் அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக வெறுமனே ஒரு வீரரை அணியில் இணைக்க வேண்டாம், இதில் ரிஷப் பண்டின் தவறு எதுவும் கிடையாது, இந்த முடிவிற்காக அணி நிர்வாகத்தையே குறை சொல்ல வேண்டும், நான்காவது பேட்டிங் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் நிலையாக விளையாட வேண்டும், இடது கை பேட்ஸ்மேன் அணியில் இருந்தால் தான் பலன் அடையலாம் என இந்திய அணி முட்டால் தனமாக முடிவெடுக்க வேண்டாம், அணியில் இடது கை பேட்ஸ்மேன் கட்டாயம் வேண்டும் என இந்திய அணி தொடர்ந்தால் அதில் எந்த ஒரு பலனும் கிடைக்காது” என சபாக் கரீம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.