இந்த வருட (2017-18) ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த வாரம் 6ஆம் தேதி துவங்கி முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த முதல் சுற்றில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக ஹர்பஜன் சிங்கும், துணைக் கேப்டனாக யுவராஜ் சிங்கும் நியமிக்கப் பட்டனர்.
ஆனால், இருவரும் முதல் சுற்றுப் போட்டில் ஆடவில்லை. இதற்க்காக யுவ்ராஜ் சிங் தேசிய கிரிக்கெட் அகாடமியில், ‘யோ-யோ’ உடல் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள சென்றாதால் முதல் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ள வில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால், அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
தற்போது வெளியாகியுள்ள செய்தியின் படி முதல் சுற்றின் இரண்டாவ்து போட்டிக்கு யுவ்ராஜ் சிங் தயாராக உள்ளார் என பஞ்சாம் கிரிக்கெட் சங்கம் சசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங் விளையாடுவது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
யுவ்ராஜ் சிங் மற்றும் ரவி அஷ்வின் ஆகிய இருவருமே தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைக்கப்படும் ‘யோ-யோ’ தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் தற்போது அவருடைய ‘யோ-யோ’ டெஸ்ட் பற்றிய செயதியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்தின் வோர்சிஸ்டர்சைர் கவுண்ட்டி அணிக்காக விளையாடி வந்தார்.
தற்போது அங்கு அந்த சீசன் முடிந்ததால் இந்தியா திரும்பி ரஞ்சி கோப்பை தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடவுள்ளது.நியூசிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் முதல் வாரம் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணி இந்த போட்டிகளுக்காக இந்தியாவில் அக்டோபர் 22ஆம் தடி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளவுள்ளது
இந்த தொடர் அக்டோபர் 22ஆம் தேதி மும்பையில் முதல் ஒருநாள் போட்டியில் துவங்குகிறது.
இந்த தொடரை மனதில் வைத்து அணியில் இடம் பிடிக்கும் வகையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்படும் ‘யோ-யோ’ உடல் தகுதி தேர்வை வெற்றி கரமாக முடித்து விட்டதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது யுவ்ராஜ் சிங்கும் அந்த ‘யோ-யோ’ உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், யுவ்ராஜ் சிங்கின் பயிற்சி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பஞ்சாப் அணி விளையாடிய முதல் போட்டி ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலவில் நடைபெற்றது. இந்த போட்டி ட்ராவில் முடிந்தது. சி பிரிவில் சென்னையில் நடந்த போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அணிகள் மோதின. இந்த போட்டி ட்ராவில் முடிந்தது.
இரண்டாவது சுற்றுப் போட்டிகள் வரும் 14 ஆம் தேதி துவங்குகிறது. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளை எதிட்கொள்கிறது. சென்னையில் நடைபெரும் போட்டியில் தமிழ்நாடு அணி திரிபுரா அணியை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் 4-1 என தொடரை இழந்து , அடுத்து முதல் டி20 போட்டியிலும் தோற்ற ஆஸ்திரேலிய அணி 2ஆவது டொ20 போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடருகு உயிர் கொடுத்துள்ளது. 3ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்த் டி20 தொடரையாவது கைப்பற்றி ஆருதல் தேடலாம் என முயற்சி செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி.
அதே நேரத்தில் இந்திய் அணி 2ஆவது டி20 போட்டியில் தோற்றாலும் 3ஆவது பொட்டியில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நிருத்த முற்படுகிறது.
இடையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தோல்பட்டை காயம் காரணமாக கடைசி இரண்டு டி20 போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு மாற்றாக கேப்டன் என டேவிட் வார்னர் செயல்பட்டு இந்திய சுற்றுப்பயனத்தின் 2ஆவது வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 3ஆவது போட்டி ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிக்கான உத்தேச அணி : விராட் கோலி(கேப்டன்), எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, சிகர் தவான், லோகேஷ் ராகுல், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா