ட்விட்டரில் பல நகைச்சுவைக் கருத்துகளை பதிவிட்டு வருபவர் சேவாக், தற்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரின் ட்வீட் ஒன்றை கேலி செய்ததன் மூலம் யுவராஜ் சிங்கும், சேவாகுடன் இணைந்துள்ளார்.
ஒரே ஓவரில் 6 சிக்சர்களுக்குப் பெயர் பெற்ற யுவராஜ் சிங் தற்போது உடற்தகுதியுடன் போராடி வருகிறார். இந்நிலையில் களத்துக்கு வெளியே தன்னுடைய நகைச்சுவை உணர்வைக் காட்டி அக்தரைக் கேலி செய்துள்ளார்.
அக்தர் தனது ட்வீட்டில் தன்னுடைய போட்டோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார், அதில் வெல்டிங் ஹெல்மெட், கிளவ்கள் ஆகியவற்றுடன் இருந்தார் அக்தர். மேலும் டிவைன் ‘தி ராக்’ ஜான்சன் வாசகம் ஒன்றையும் பதிவிட்டு, தன்னுடைய வாசகமான, “கடின உழைப்பு மட்டுமே உங்கள் கனவுகளுக்கு உங்களை இட்டுச் செல்லும்” என்று பொன் மொழி உதிர்த்திருந்தார்.
வெல்டிங் ஹெல்மெட்டுடன் அக்தர் காணப்படும் அந்தப் புகைப்படத்தையும் அவரது பொன்மொழியையும் கேலி செய்யும் விதமாக யுவராஜ் சிங் தன் ட்விட்டரில் “எல்லாம் சரிதான், ஆனால் வெல்டிங் செய்ய எங்கு போகப்போகிறாய்?” என்று பதிவிட்டுள்ளார்