யுவராஜின் காதல் ரகசியம்..

இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சில வருடம் முன்பு மாடல் மற்றும் நடிகையுமான ஹசல் கீச் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தன் காதல் மற்றும் திருமணத்திற்கான காரணத்தை நேற்று நண்பரின் திருமண நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான “inside edge” எனும் வெப் சீரியசில் பிரபலமான பாலிவுட் நடிகர் அங்கத் பேடி. இவர் முன்னாள் இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் மகன் ஆவார். இவர் இந்திய வீரர் யுவராஜுக்கு நெருங்கிய நண்பர். யுவராஜுக்கு மட்டுமல்லாது ஹர்பஜன் சிங்குக்கும் நெருங்கிய நண்பர்.

சில வாரங்களுக்கு முன்பாக இவர் தனக்கும் நடிகை நேஹா தூபியா க்கும் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால், பாலிவுட் நகரமே ஆச்சர்யப்பட்டது.

மேலும், திருமணம் மிக ரகசியமாக நடத்த பட்டது. சக நடிகர்கள் அனைவர்க்கும் அறியும் வகையில் வரவேற்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

யுவராஜின் திருமணம் நடப்பதற்கு அங்கத் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். யுவராஜுக்கு ஹசல் கீச்சை அறிமுகம் செய்ததே அங்கத் தான்.

எதேச்சையாக, அங்கத்’தின் பேஸ்புக்கில் ஹசல் கீச்சை பார்க்க, யார் என கேட்டு அறிமுகம் கொடுக்க சொல்லி இருக்கிறார். அங்கு தான் அவர்களது காதலுக்கு துவக்கமே. பின்பு, திருமணத்தில் தான் முடிந்தது.

இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், ” முதல் சந்திப்பிலேயே மிகவும் நெருக்கமாகிவிட்டோம் இருவரும். அதன் பிறகு, நான் ஹசலிடம் இருந்து விலகி விடுமாறும், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனவும் அங்கத்’திடம் தெரிவித்தேன். ஹசல் எனது ரெக்வஸ்டை மூன்று மாதங்களுக்கு பிறகே அக்சப்ட் செய்தார்” என சிரிப்புடன் தெரிவித்தார்.

Vignesh G:

This website uses cookies.