பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கையில் நடுவில் புகுந்து யுவராஜ் சிங் கிண்டலடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மறக்கமுடியாத ஒரு வீரராக வலம் வந்தவர் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு மிக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்திருக்கிறார். மேலும் அந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அதன் பிறகு புற்றுநோயால் அவதிப்பட்ட இவர், சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பெற்றாலும் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. கடந்த சில வருடங்களாக உடல்தகுதி காரணமாக இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒருமனதாக தெரிவித்தார்.
இந்திய அணியில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரை நல்ல மரியாதையுடன் வெளியே அனுப்பவில்லை என பிசிசிஐ இடம் இவரது ரசிகர்கள் கடுமையாக கடிந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஓய்விற்கு பிறகு பிசிசிஐ ஒப்புதலுடன் கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக் தொடரில் டொரன்டோ நேஷனல் அணிக்காக தற்போது ஆடி வருகிறார். அதில் முதல் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து வெளியேறிய ஏமாற்றினார். அதன் பிறகு தீவிர பயிற்சி மேற்கொண்டு இரண்டாவது போட்டியில் அதிரடியாக ஆடி அசத்தினார்.
இரண்டாவது போட்டிக்குப் முன்னர் யுவராஜ் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொகுப்பாளினி எரின் ஹாலந்து சக வீரர் பென் கட்டிங்கை பேட்டி எடுத்து கொண்டிருக்கையில், திடீரென உள்ளே புகுந்த யுவராஜ் உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம்? என கிண்டலடித்தார்.
பென் கட்டிங் மற்றும் எரின் ஹாலந்து இருவரும் கடந்த ஆறு வருடங்களாக நெருங்கிய நட்புடன் பழகி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
பேட்டி எடுத்து கொண்டிருக்கையில் திடீரென யுவராஜ் உள்ளே புகுந்து இப்படிக் கேள்வி எழுப்பியது சிறிது நேரம் இருவருக்கும் இடையே கலகலப்பை ஏற்படுத்தியது